CWG 2026: தங்கம் வெல்வாரா நீரஜ் சோப்ரா..? பைனலில் களமிறங்கும் டைமிங் இதுதான்..!
Javelin Throw Final Live Streaming: நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வெல்வது எளிதாக இருக்காது. தகுதிச் சுற்றின்போது பலத்த காற்று வீசியதால், நீரஜ் சோப்ரா 79.61 மீட்டர் தூரம் மட்டுமே எறிந்து, தகுதிச் சுற்றில் 5வது இடத்தைப் பிடித்தார். தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்த இலங்கையின் ரொமேஷ் பத்திரகேவும் 82.84 மீட்டர் தூரம் எறிந்தார்.
கிளாஸ்கோவில் தற்போது 2026 காமன்வெல்த் போட்டிகள் (Common Wealth Games 2026) நடைபெற்று வருகிறது. இதில், தனது இரண்டாவது காமன்வெல்த் விளையாட்டுப் பதக்கத்தை வெல்வதற்காக நீரஜ் சோப்ரா 8 ஆண்டுகளாகக் காத்திருந்தார். அந்தக் காத்திருப்பு விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. நேற்று அதாவது 2026 ஜூலை 30ம் தேதி நடைபெற்ற தகுதிச் சுற்றில் 79.61 மீட்டர் தூரம் எறிந்து, நீரஜ் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் மற்றும் இந்தியாவின் மற்ற இரண்டு வீரர்களான ரோஹித் யாதவ், யஷ்வீர் சிங் ஆகியோரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். நீரஜ் சோப்ரா (Neeraj Chopra) கடைசியாக 2018 காமன்வெல்த் போட்டிகளில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்றார், ஆனால் காயம் காரணமாக 2022 போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியவில்லை. அதன்படி, இந்திய ரசிகர்கள் நீரஜ் சோப்ரா மீது அதிக எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.
ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் ஆகிய 3 பதக்கங்களையும் வெல்வதற்கான ஒரு பொன்னான வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. அந்தவகையில், நீரஜ் சோப்ரா உள்பட மேலும் இரண்டு இந்திய வீரர்கள் பங்கேற்கும் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி எந்த நேரத்தில் தொடங்கும் என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.
ALSO READ: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நீரஜ் சோப்ரா.. பைனலில் களமிறங்குவது எப்போது?




இறுதிப் போட்டி எத்தனை மணிக்குத் தொடங்கும்?
ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிப் போட்டியானது நாளை அதாவது 2026 ஆகஸ்ட் 1ம் தேதி இரவு 12:45 மணிக்குத் தொடங்கும்.
நேரலையில் எங்கே பார்ப்பது?
இந்தியாவில் நடைபெறும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு சோனி லிவ் ஆப்களில் காணலாம். இது தவிர, சோனி ஸ்போர்ட்ஸ் டென் 2, சோனி ஸ்போர்ட்ஸ் டென் 3 மற்றும் சோனி ஸ்போர்ட்ஸ் டென் 4 ஆகியவற்றில் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பை காணலாம்.
தங்கம் வென்ற நபருடன் போட்டியிடும் நீரஜ் சோப்ரா..
நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வெல்வது எளிதாக இருக்காது. தகுதிச் சுற்றின்போது பலத்த காற்று வீசியதால், நீரஜ் சோப்ரா 79.61 மீட்டர் தூரம் மட்டுமே எறிந்து, தகுதிச் சுற்றில் 5வது இடத்தைப் பிடித்தார். தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்த இலங்கையின் ரொமேஷ் பத்திரகேவும் 82.84 மீட்டர் தூரம் எறிந்தார்.
ALSO READ: CWG 2026 9ம் நாள்: நீரஜ் சோப்ரா முதல் குத்துச்சண்டை அரையிறுதிப் போட்டிகள் வரை.. இந்தியாவின் அட்டவணை!
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதலில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் சாதனை படைத்துள்ளார். இவர் 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் 90.18 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வரலாறு படைத்தார். அர்ஷத்துடன், பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸும் தங்கப் பதக்கத்திற்காகப் போட்டியிடுவார்.