India vs Brazil: 112 ஆண்டுகள் காத்திருப்பு! இந்திய மண்ணில் களமிறங்கும் பிரேசில் கால்பந்து அணி.. கொண்டாடும் ரசிகர்கள்!
Brazil Football Team in India: பிரேசில் அணி முதன்முதலில் 1914-ஆம் ஆண்டில் கால்பந்து அரங்கில் காலடி எடுத்து வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அன்று முதல் 112 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், பிரேசில் அணி இந்திய மண்ணில் ஒரு போட்டியில் கூட விளையாடியதில்லை.
இந்திய கால்பந்து (Indian Football) வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கவிருக்கிறது. கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக, பிரேசில் அணி (Brazil Football Team) இந்திய மண்ணில் ஒரு போட்டியில் விளையாட உள்ளது. ஐந்து முறை உலக சாம்பியனான பிரேசில் அணி, வருகின்ற 2026 அக்டோபர் 3ம் தேதி கொல்கத்தாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சால்ட் லேக் ஸ்டேடியத்தில் இந்திய அணிக்கு எதிராக ஒரு நட்புப் போட்டியில் விளையாட உள்ளது. முன்னதாக, பிரேசில் அணி இந்தியாவிற்கு வரக்கூடும் என்று சில காலமாக ஊகங்கள் நிலவி வந்த நிலையில், தற்போது பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு (CBF), இந்திய சுற்றுப்பயணத்தின் போது அந்த அணி கொல்கத்தாவில் விளையாடும் என்பதை உறுதி செய்துள்ளது.
ALSO READ: அடுத்தடுத்து தோல்வி.. இந்திய அணியின் அடுத்த சர்வதேச போட்டி எப்போது..? முழு அட்டவணை!




இந்தியா வரும் பிரேசில் அணி:
A date for the history books. 🇮🇳🤝🇧🇷 pic.twitter.com/Sj7zneeHnv
— Indian Football (@IndianFootball) July 30, 2026
2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் போது, CBF-க்கும் இந்தியப் பங்குதாரர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. 2026 உலகக் கோப்பையின் போது இந்தியாவிலிருந்து பிரேசில் அணிக்குக் கணிசமான ஆதரவு கிடைத்ததாலும், ரசிகர்களின் ஏராளமான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானதாலும், இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் பிரேசிலின் ஆர்வம் மேலும் அதிகரித்தது. அதேநேரத்தில், அர்ஜென்டினா நட்சத்திர வீரர் மெஸ்ஸியும் இந்தியா வந்திருந்தபோது, அதீத கூட்டத்தால் இந்தியாவில் கால்பந்து ரசிகர்களின் ஆர்வம் தெரிந்தது. இருப்பினும், உலகக் கோப்பைக்குப் பிறகு சர்வதேச கால்பந்துப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற நெய்மர், பிரேசில் அணியுடன் செல்ல மாட்டார். இது இந்தியாவில் உள்ள நெய்மர் கால்பந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ALSO READ: நீல நிறம் தவிர்ப்பு.. காவி நிற ஜெர்சிக்கு மாறிய இந்திய ஹாக்கி அணி.. எழுந்த விமர்சனம்!
அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பும் (AIFF) இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியை உறுதி செய்துள்ளது. AIFF வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரலாற்றில் ஒரு புதிய தேதி சேர்க்கப்பட உள்ளது. இந்தியா மற்றும் பிரேசில் அணிகளுக்கு இடையேயான சர்வதேச கால்பந்து நட்புப் போட்டி வருகின்ற 2026 அக்டோபர் 3ம் தேதி சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நடைபெறும்” என்று கூறப்பட்டுள்ளது.
பிரேசில் அணி முதன்முதலில் 1914-ஆம் ஆண்டில் கால்பந்து அரங்கில் காலடி எடுத்து வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அன்று முதல் 112 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், பிரேசில் அணி இந்திய மண்ணில் ஒரு போட்டியில் கூட விளையாடியதில்லை.