போலீஸ் காவலில் நீதிமன்றத்துக்கு வந்த கைதி சுவர் ஏறி தப்பியோட்டம் – தேனியில் பரபரப்பு
Theni Prisoner Escapes : தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட கைதி, போலீசாரை ஏமாற்றி நீதிமன்ற சுவர் மீது ஏறி குதித்து தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக்கை தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தபோது தப்பியுள்ளார்.
தேனி, செப்டம்பர் 23 : தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட கைதி, போலீசாரை ஏமாற்றி நீதிமன்ற சுவர் மீது ஏறி குதித்து தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள குள்ளப்புரம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் மீது கடந்த 2022-ம் ஆண்டு ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
போலீஸ் காவலில் நீதிமன்றத்துக்கு வந்த கைதி சுவர் ஏறி தப்பியோட்டம்
வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல் இருந்ததாக கூறப்படும் நிலையில், கார்த்திக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட கார்த்திக்கை லட்சுமிபுரத்தில் உள்ள தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக போலீசாரின் கண்காணிப்பில் இருந்து தப்பிய கார்த்திக், நீதிமன்ற சுவர் மீது ஏறி மறுபுறம் குதித்து ஓடினார்.
இதையும் படிக்க : சென்னையில் மூதாட்டிக்கு தொல்லை – தவெக நிர்வாகி கைது




இதையடுத்து போலீசார் அவரை விரட்டிச் சென்றும் கார்த்திக்கை பிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் ஏட்டு நாகராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தப்பியோடிய கார்த்திக்கை பிடிக்க போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக பெருந்துறை அருகே காவல்துறையினரின் பாதுகாப்பில் இருந்த கைதி தப்பியோடிய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன் குற்ற வழக்கு ஒன்றில் சேலம் மாவட்டம் காடையாம்பட்டியைச் சேர்ந்த நரேஷ் குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கா கசேர்ந்தனர். அங்கு போலீஸ் காவலில் இருந்த நரேஷ் குமார் தப்பியோடியிருக்கிறார்.
பின்னர் நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அவரை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கு அவருக்கு நீதிபதி ஓராண்டு சிறை தண்டனை வழங்கினார். இதனையடுத்து அவரை மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்க காவல்துறையினர் அழைத்து சென்றனர். இதனையடுத்து பெருந்துரை அருகே வாகனத்தை நிறுத்தி கைதியுடன் காவல்துறையினர் டீ சாப்பிட்டுள்ளனர்.
இதையும் படிக்க : “ரோபோ மோதி தமிழக இளைஞர் பரிதாப பலி!”.. தென்கொரியாவில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!!
அப்போது காவல்துறையினரை தள்ளி விட்டு கைதி நரேஷ்குமார் மீண்டும் தப்பி ஓடியுள்ளார். அப்போது காவலர் ஜெகதீசனுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனிப்படை அமைத்து தேடிய நிலையில் அவர் தருமபுரி மாவட்டம் பாப்பாரபட்டியில் பதுங்கி இருந்தது தெரிய வந்ததது. நரேஷ்குமாரை பெருந்துறை போலீஸாா் கைது செய பெருந்துறை நீதிமன்றத்தில் அவரை செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.