AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சேலம் சூட்கேஸ் கொலை வழக்கு.. 5 ஆண்டுகளுக்கு பிறகு வங்கதேச பெண் புனேவில் கைது!

Salem Beauty Parlour Murder case: சேலத்தில் பியூட்டி பார்லர் நடத்தி வந்த வங்கதேசப் பெண் தேஜ்மண்டல், கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு சூட்கேஸில் அடைக்கப்பட்ட வழக்கில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய குற்றவாளியான நிஷி என்ற பெண் புனேவில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பள பாக்கி மற்றும் முக்கோணக் காதல் விவகாரத்தால் நடந்த இக்கொடூர கொலை சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் சூட்கேஸ் கொலை வழக்கு.. 5 ஆண்டுகளுக்கு பிறகு வங்கதேச பெண் புனேவில் கைது!
கொலையான பெண்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 23 Sep 2026 10:57 AM IST

சேலம், செப்.23: சேலம் மாநகரில் பியூட்டி பார்லர் உரிமையாளரான வங்கதேசத்தை சேர்ந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, அவரது உடல் சூட்கேஸில் அடைக்கப்பட்ட சம்பவம் கடந்த 2021-ஆம் ஆண்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூரக் கொலை நடந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தலைமறைவாக இருந்த முக்கிய பெண் குற்றவாளி தற்போது காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத பாலியல் தொழில், சம்பள பாக்கி மற்றும் முக்கோணக் காதல் தகராறு காரணமாக இக்கொலை அரங்கேறியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க: முதல்வர் விஜய்யுடன் ஏன் லண்டன் செல்லவில்லை? அமைச்சர் கீர்த்தனா ஆதாரத்துடன் விளக்கம்.. என்ன அது!

சேலத்தில் ரகசிய தொழில் மற்றும் கொடூரக் கொலை:

வங்கதேசத்தை சேர்ந்த 26 வயதான தேஜ்மண்டல் என்பவரும், சேலம் ஆத்தூரைச் சேர்ந்த பிரதாப் என்பவரும் சென்னையில் பியூட்டி பார்லரில் வேலை செய்தபோது பழக்கமானவர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து சேலத்தின் பள்ளபட்டி மற்றும் சங்கர் நகர் பகுதிகளில் மசாஜ் சென்டர்களை நடத்தி வந்தனர். அத்துடன், குமாரசாமிப்பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். ஆனால், வெளிப்பார்வைக்கு மசாஜ் சென்டர் என்று கூறிக்கொண்டு, வங்கதேசத்தில் இருந்து பெண்களை வரவழைத்து சட்டவிரோதமாக பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளனர். அங்கு வேலை பார்த்த நிஷி, ஷீலா, ஓஷி ஆகிய பெண்களுக்கும், லுப்லு என்ற ஆணுக்கும் தேஜ்மண்டல் சரிவர சம்பளம் வழங்காமல் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

முக்கோணக் காதலும் திட்டமிட்ட கொலையும்:

சம்பள பாக்கி ஒருபுறமிருக்க, நிஷியின் கணவனான லுப்லுவுக்கும் தேஜ்மண்டலுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நிஷி மற்றும் அவரது கூட்டாளிகள் தேஜ்மண்டலைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். கடந்த 2021 அக்டோபர் மாதம் பிரதாப் சென்னை சென்றிருந்த சமயம் பார்த்து, நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த நால்வரும் தேஜ்மண்டலின் கை, கால்களைச் சேலையால் கட்டி, மூச்சுத்திணறடித்துக் கொடூரமாகக் கொலை செய்தனர். பின்னர் உடலை ஒரு டிராலி சூட்கேஸில் அடைத்து வைத்துவிட்டு, வீட்டிலிருந்த பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பிச் சென்றனர். தகவல் அறிந்து வந்த அஸ்தம்பட்டி போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதையும் படிக்க: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அவதூறு வழக்கு… நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் கொடுத்த பதிலடி.. முழு விவரம்!

5 ஆண்டுகள் மறைவு வாழ்க்கையும் அதிரடி கைதும்:

கொலை நடந்தவுடன் குற்றவாளிகள் நால்வரும் எல்லை தாண்டி வங்கதேசத்திற்குத் தப்பிச் சென்றனர். இதற்கிடையே, உடலை வாங்க உறவினர்கள் யாரும் வராததால் தேஜ்மண்டலின் சடலம் 250 நாட்களுக்கும் மேலாக அரசு மருத்துவமனை பிணவறையிலேயே வைக்கப்படிருந்தது. இந்நிலையில், முக்கிய குற்றவாளியான நிஷி தனது அடையாளத்தை மாற்றிக்கொண்டு மீண்டும் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து, மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். ரகசியத் தகவலின் பேரில் அங்கு விரைந்த சேலம் தனிப்படை போலீசார், நிஷியை அதிரடியாகக் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரையும் சர்வதேச எல்லைப் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் பிடிக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Follow Us