AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காந்தி ஜெயந்தி, ஆயுதபூஜை விடுமுறை: 2 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

Two Special Trains Announced : வருகிற 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காந்தி ஜெயந்தி, ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி உள்ளிட்ட தொடர் விடுமுறை வருகின்றன. இதனையடுத்து ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், தெற்கு ரயில்வே 2 சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

காந்தி ஜெயந்தி, ஆயுதபூஜை விடுமுறை:  2 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 23 Sep 2026 10:06 AM IST

சென்னை, செப்டம்பர் 23 : வருகிற 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காந்தி ஜெயந்தி, ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி உள்ளிட்ட தொடர் விடுமுறை வருகின்றன. இதனை முன்னிட்டு மக்கள் அதிக அளவில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை – கொல்லம் இடையே 2 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வருகிற அக்டோபர் 2, 2026 அன்று காந்தி ஜெயந்தியும், அக்டோபர் 19, 2026 ஆயுதபூஜை மற்றும் அக்டோபர் 20, 2026 விஜயதசமி என பண்டிகைகள் அடுத்தடுத்து வருகின்றன. குறிப்பாக இந்த விடுமுறை வரா இறுதி நாட்களை ஒட்டி வருவதால் மக்கள் அதிக அளவில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், தெற்கு ரயில்வே 2 சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

இதையும் படிக்க : “ரோபோ மோதி தமிழக இளைஞர் பரிதாப பலி!”.. தென்கொரியாவில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!!

சென்னை – கொல்லம் இடையே சிறப்பு ரயில்

சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு ரயில் எண் 06117, 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் இரவு 11.40 மணிக்கு புறப்படும். மறுநாள் மாலை 4.20 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து சிறப்பு ரயில் எண் 06118, 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு

 

இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் போத்தனூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். எனவே அந்த வழியாக பயணிப்பவர்கள் இந்த சிறப்பு ரயிலை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதையும் படிக்க : Tamil Nadu Weather forecast: வலுவடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி – இந்த மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

மேலும், சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு ரயில் எண் 06121, 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மாலை 4.20 மணிக்கு கொல்லம் சென்றடையும். அதே போல மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து சிறப்பு ரயில் எண் 06122, 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 4, 11, 18, 25 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 23, 202 காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணத்தை திட்டமிடும் பொதுமக்கள் இந்த சிறப்பு ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Follow Us