AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

CWG 2026: இந்தியாவுக்குத் தங்க வேட்டை… ஜூடோவில் தங்கம் வென்ற ஹர்ஷ் சிங் மற்றும் அஸ்மிதா டே

காமன்வெல்த் 2026 போட்டியில் இந்திய ஜூடோ வீரர்கள் ஹர்ஷ் சிங் மற்றும் அஸ்மிதா டே தலா ஒரு தங்கப் பதக்கம் வென்று அசத்தினர். இந்த இரட்டை தங்கப் பதக்கத்தின் மூலம் இந்தியா பதக்கப் பட்டியலில் மேலும் முன்னேறியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

CWG 2026:  இந்தியாவுக்குத் தங்க வேட்டை… ஜூடோவில் தங்கம் வென்ற ஹர்ஷ் சிங் மற்றும் அஸ்மிதா டே
ஹர்ஷ் சிங் மற்றும் அஸ்மிதா டே
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 31 Jul 2026 22:17 PM IST

காமன்வெல்த் 2026 போட்டியில்ல் இந்திய ஜூடோ வீரர்கள் ஹர்ஷ் சிங் மற்றும் அஸ்மிதா டே தலா ஒரு தங்கப் பதக்கம் வென்று அசத்தினர். இந்த இரட்டை தங்கப் பதக்கத்தின் மூலம் இந்தியா பதக்கப் பட்டியலில் மேலும் முன்னேறியுள்ளது. ஹர்ஷ் சிங் மற்றும் அஸ்மிதா டேவின் வெற்றி இந்திய ஜூடோ வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

ஜூடோவில் தங்கம் வென்ற ஹர்ஷ் சிங் மற்றும் அஸ்மிதா டே

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஜூடோ வீரர்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர். ஆண்களுக்கான இறுதிப் போட்டியில், இந்திய ஜூடோ வீரர் ஹர்ஷ் சிங் தனது வலிமையான ஆஸ்திரேலிய வீரரான ஜோசுவா காட்ஸை வீழ்த்தி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி நிமிடம் வரை மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்ற இப்போட்டியில், மின்னல் வேக நகர்வு மூலம் தங்கப் பதக்கத்தை வென்ற அவர், நாட்டிற்கு மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தந்தார்.

மற்றொரு பக்கம்  இந்தியாவின் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத ஒரு வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற பெண்களுக்கான 48 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட இந்திய ஜூடோ வீராங்கனை அஸ்மிதா டே, தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரலாறு படைத்தார். கனடாவின் ஹைடி குவாச்சுக்கு எதிரான விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் அவர் வெளிப்படுத்திய போராட்ட குணம் விளையாட்டு ஆர்வலர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இரு வீரர்களும் கிளாஸ்கோ அரங்கிற்குள் நுழைந்த கணமே கடும் போட்டி தொடங்கியது. ஹர்ஷ் சிங் தனது கால்களால் காட்ஸின் தலையை லாக் செய்ய தீவிர முயற்சி செய்தபோதிலும், அந்த ஆஸ்திரேலிய வீரர் சமயோசிதமாக அந்த ஆபத்திலிருந்து தப்பினார். கடும் எதிர்ப்பு நிலவியதால், முதல் இரண்டு நிமிடங்களின் முடிவில் இரு வீரர்களாலும் எந்தப் புள்ளியும் பெற முடியவில்லை. 0-0 என்ற நிலையில் ஆட்டம் சமநிலையில் இருந்ததால், பதற்றம் உச்சத்தை அடைந்தது.

கடைசி நிமிடத்தில் நடந்த மேஜிக்

போட்டி முடிய ஒரு நிமிடம் மட்டுமே இருந்த நிலையில், ஹர்ஷ் சிங் தனது உண்மையான விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தினார். தனது கால்களால் எதிராளியின் உடற்பகுதியை லாக் செய்து கீழே வீழ்த்த முயன்றபோது, ​​எதிர்பாராத ஒரு நகர்வைச் செய்து புள்ளியைப் பெற்றார். இந்த முக்கியமான தருணத்தில் துல்லியமான உத்தியைக் கையாண்டு ‘வாசா-அரி’ புள்ளியைப் பெற்ற அவர், ஆஸ்திரேலிய வீரரின் வெற்றி வாய்ப்பை அங்கேயே தகர்த்தெறிந்தார்.

இந்தச் சிறப்பான வெற்றியின் மூலம், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் ஜூடோ பிரிவில் இந்தியா தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. கடும் போட்டியாக அமைந்த ஆட்டத்தை ஒரே ஒரு புள்ளியின் வித்தியாசத்தில் தனக்குச் சாதகமாக மாற்றியமைத்த ஹர்ஷ் சிங்கின் திறமையை விளையாட்டுத் துறை சார்ந்த பலரும் பாராட்டி வருகின்றனர். அனுபவம் வாய்ந்த ஆஸ்திரேலிய வீரரை வீழ்த்திப் பெற்ற இந்த வெற்றி, இந்திய விளையாட்டுத் துறையில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us