ராஜஸ்தான் மாநிலம் கரவுலி மாவட்டத்தில் உள்ள நர்வார் கோட்டையில் இருந்து சுமார் 300 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க பீரங்கி திருடப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்ட பீரங்கியை மீட்கும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் சைபர் பிரிவு ஆய்வு மூலம் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்டறிந்த சிவ்புரி போலீசார், கரவுலி போலீசாருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் கரவுலியைச் சேர்ந்த அமன் மற்றும் டிம் ராம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.