AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஒரே தண்டவாளத்தில் வந்த இரு ரயில்கள்.. பீதியில் தெறித்து ஓடிய பயணிகள்.. எழுப்பூரில் திக் திக் சம்பவம்!

Chennai Suburban Electric Trains : சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே இரு புறநகர் மின்சார ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், ரயில் பயணிகள் அலறி அடித்துக் கொண்டு தெறித்து ஓடினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

ஒரே தண்டவாளத்தில் வந்த இரு ரயில்கள்.. பீதியில் தெறித்து ஓடிய பயணிகள்.. எழுப்பூரில் திக் திக் சம்பவம்!
மின்சார ரயில்கள்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 30 Jul 2026 20:39 PM IST

சென்னை கடற்கரை- தாம்பரம் வழித்தடத்தில் தினந்தோறும் சுமார் 200- க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், தினந்தோறும் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்களும் புறநகர் மின்சார ரயில் போக்குவரத்தை பெரிதளவு பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து சேவை முக்கிய இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில், சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே ஒரே தண்டவாளத்தில் இரு புறநகர் ரயில்கள் நேருக்கு நேர் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்த ரயில் பயணிகள் அச்சமடைந்து சத்தமிட்டனர். பலர் விபத்து நிகழ்ந்து விடும் என்று அச்சத்தில் ரயிலில் இருந்து குதித்து தப்பி ஓடினர்.

தொழில்நுட்ப கோளாறால் நிகழ்ந்த சம்பவம்

அந்த இரு ரயில்களில் இருந்து இறங்கிய பயணிகள் அருகில் உள்ள தண்டவாளத்தை முன்னெச்சரிக்கை இன்றி சர்வ சாதாரணமாக கடந்து சென்றனர். மாற்று வழித்தடத்தில் ரயில்கள் வரும் பட்சத்தில் அது ஒரு விபத்துக்கு வழிவகுக்கும் நிலை இருந்தது. இது தொடர்பாக தகவல் அறிந்த ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: லைக்குக்கு ஆசைப்பட்டு சிக்கிய சிறுவர்கள்.. தூத்துக்குடியில் கத்தியுடன் ரீல்ஸ்.. தூக்கி சென்ற போலீஸ்!

இரு ரயில்களும் நடு வழியில் நிறுத்தப்பட்டன

இரு மின்சார ரயில்களும் ஒரே வழித்தடத்தில் வந்ததன் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைக்காக அந்த ரயில்கள் உடனே நிறுத்தப்பட்டன. ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் வருவதைப் பார்த்த அதன் ஓட்டுனர்கள் விபரீதத்தை உணர்ந்து விபத்தை தவிர்க்கும் வகையில் இரு ரயில்களும் சென்னை எழும்பூர்- சேத்துப்பட்டு இடையே நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் வந்ததால் தாம்பரம்- செங்கல்பட்டு வழித்தடத்தில் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வந்தது.

அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணை

அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ரயில்களுக்கு தண்டவாளத்தை மாற்றி தரும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இருந்தாலும், இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் ரயில்வே காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில் வழித்தடத்தில் முக்கிய மார்க்கமாக இருந்து வரும் எழும்பூர்- வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: தலைமை செயலகத்தில் பெரும் பரபரப்பு.. தாய்-மகள்கள் எடுத்த விபரீத முடிவு.. அலறி அடித்து ஓடிய பாதுகாப்பு படையினர்!

Follow Us