மக்களோடு இணைய புதிய தளம்.. வீ த லீடர்ஸ் செயலி அறிமுகம்.. அண்ணாமலை வெளியிட்ட வீடியோ!
We The Leaders Organization App : அண்ணாமலை தொடங்கிய வீ த லீடர்ஸ் அமைப்பின் மொபைல் செயலி அறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி பதிவிறக்கம் செய்வது மற்றும் அதில் இணைவது தொடர்பான முழு விவரங்கள் வீடியோவாக வெளியிடப்பட்டு உள்ளது .
தமிழக பாஜகவின் மாநில தலைவராக இருந்து வந்த அண்ணாமலை, திடீரென அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து, அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு எதுவும் வழங்கப்படாமல் இருந்து வந்த நிலையில், திடீரென பாஜகவில் இருந்து விலகியதாக அறிவிப்பு வெளியிட்டார். அத்துடன், வீ த லீடர்ஸ் என்ற அமைப்பை தொடங்கி அரசியல் கட்சியாக மாற்றி எதிர் வரும் தேர்தலை சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில், வீ த லீடர்ஸ் அமைப்பின் பிரத்தியேக மொபைல் செயலியை அண்ணாமலை வெளியிட்டுள்ளார். இந்த செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது மற்றும் அதில் எவ்வாறு பதிவு செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வீடியோவாக தனது சமூக வலைதள பக்கத்தில் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
வீ த லீடர்ஸ் செயலி மூலம் அமைப்பில் இணைவது
வீ த லீடர்ஸ் அமைப்பின் செயலியை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில், ஏற்கனவே இணையவழியில் இணைந்தவர்கள் என்றால் உள்நுழை என்பதன் வழியாகவும், புதிதாக இணைபவர்கள் என்றால் இணைப்பு வழியாகவும் வீ த லீடர்ஸ் அமைப்பில் இணைந்து கொள்ளலாம். இந்த இரண்டு நிலைகளிலும் செல்போன் எண்ணை பதிவு செய்து கடவுச் சொல்லை உறுதிப்படுத்தியதும் சரி பார்க்கும் ஆப்ஷனை அழுத்தி இணைந்து கொள்ளலாம்.




மேலும் படிக்க: அதிருப்தியில் ஓ பன்னீர்செல்வம்.. திமுகவிலிருந்து விலகி த.வெ.கவில் இணைய திட்டமா?
செயலியில் கேட்கப்படும் சுய விவரங்கள்
புதிதாக இணைபவர்கள் கூடுதலாக அடுத்து வரும் பக்கத்தில் தங்களது பெயர், பிறந்த தேதி, மாநிலம் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதி உள்ளிட்ட சுய விவரங்களை அளித்து தொடர்ச்சி ஆப்ஷனை அழுத்தி பதிவு செய்ய வேண்டும். இதை தொடர்ந்து, உறுப்பினராக இணைந்ததும் முகப்பு பக்கம் திறக்கப்பட்டு, அதில், அடிமட்ட தலைவராக செயல்பட விருப்பமா அல்லது தலைமைத்துவ பயிற்சியில் பங்கேற்க விருப்பமா, உள்ளாட்சி தேர்தல் உள்பட பொது தலைமை பொறுப்பை ஏற்க விருப்பமா, தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் உள்ளதா ஆகிய 4 கேள்விகள் கேட்கப்படும்.
நமது @WTLFoundation செயலியை பதிவிறக்கம் செய்து, எப்படிப் பயன்படுத்துவது என்பதை, இந்தக் காணொளியில் எளிமையாக விளக்கியுள்ளோம்.
இதனைப் பார்த்து, செயலியை பதிவிறக்கம் செய்து, உங்கள் பகுதியில் மாற்றத்தை உருவாக்கும் பயணத்தில் நீங்களும் இணைந்திடுங்கள்! சமூக மாற்றத்திற்கான தலைமைப்… pic.twitter.com/fpanshKEWD
— K.Annamalai (@annamalai_k) July 29, 2026
அண்ணாமலையின் வரவேற்பு காணொலி
இதற்கு, ஆம் அல்லது இல்லை என பதிலளிக்கலாம். பதில் அளிக்க விருப்பம் இல்லை எனில் அந்த கேள்விகளை நிராகரிக்கலாம். இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் தலைமை சேவகர் அண்ணாமலை வரவேற்பு காணொளி தோன்றி இணைப்பு உறுதி செய்யப்படும். பின்னர், முகப்பு பக்கம் திறந்து, அதில், இயக்கத்தின் நோக்கம், தலைவர்களின் எண்ணிக்கை, நிகழ்வுகளின் காணொளி மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்கள் இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கண்டித்தது ஒரு குற்றமா? தந்தையை வெட்டி கொலை செய்த கொடூர மகன்.. வேலூரில் பரபர சம்பவம்!