AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கைது நடவடிக்கை.. உயர்நீதிமன்றம் கைவிரிப்பு.. உச்சநீதிமன்றத்தை நாடிய செந்தில்பாலாஜி.. காத்திருக்கும் ட்விஸ்ட்!

Senthil Balaji Files Petition In Supreme Court: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி மேல் முறையீடு செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.

கைது நடவடிக்கை.. உயர்நீதிமன்றம் கைவிரிப்பு.. உச்சநீதிமன்றத்தை நாடிய செந்தில்பாலாஜி.. காத்திருக்கும் ட்விஸ்ட்!
உச்சநீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி முறையீடு
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 30 Jul 2026 15:45 PM IST

திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அரசு வேலை மோசடி, டாஸ்மாக்கில் ரூ. ஆயிரம் கோடி முறைகேடு, டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் ரூ.397 கோடி முறைகேடு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், தற்போது தமிழக வெற்றி கழக அரசை தவிர்க்க சதி திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கும் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி சகோதரர் அசோக்குமார் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவரும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர். இந்த நிலையில், டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் புதிய வழக்கை பதிவு செய்துள்ளனர். இதில், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இதை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இதில், இந்த மனுவை அவசரமாக பட்டியலிடக் கோரி தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வு முன் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட புதிய வழக்கில் செந்தில் பாலாஜி, ஐஏஎஸ் அதிகாரி உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: காவிரி விவகாரம்: முதல்வர் விஜய்க்காக ஹெலிகாப்டர் தயார் நிலையில் உள்ளது – முதல்வர் டி.கே சிவகுமார்..

செந்தில் பாலாஜியை கைது செய்ய தீவிரம்

இந்த நிலையில், நேற்று செந்தில் பாலாஜி தங்கி இருந்த நட்சத்திர ஓட்டல் உள்ளிட்ட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டிருந்தனர். இதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி கைதில் இருந்து தப்பிப்பதற்காக உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுவுக்கு எதிராக காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி ரூ.100 கோடி முறைகேடு புகாரி புலன் விசாரணை ஆரம்ப நிலைகள் உள்ளது. இந்த நிலையில், அவருக்கு முன் ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

மேலும், வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டிய இருப்பதால் அவருக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது என்று வாதிட்டார். அதன் அடிப்படையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செந்தில்பாலாஜி முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திற்கு மாறும் முதல்வர் அலுவலகம்.. கிளம்பியது எதிர்ப்பு!!

Follow Us