AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கடைசி நேரத்தில் ஆம்னி பஸ் கேன்சல்.. பணத்தையும் தராத நிறுவனத்திற்கு ரூ.25,000 அபராதம்!!

Coimbatore Consumer Court Penalty: தூத்துக்குடி செல்ல முன்பதிவு செய்த பயணத்தைக் கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டு, மாற்று ஏற்பாடும் செய்யாமல் கட்டணத்தையும் தர மறுத்த தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்திற்கு ₹25,000 இழப்பீடு வழங்கக் கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

கடைசி நேரத்தில் ஆம்னி பஸ் கேன்சல்.. பணத்தையும் தராத நிறுவனத்திற்கு ரூ.25,000 அபராதம்!!
ஆம்னி பேருந்து
Sekaran S
Sekaran S | Published: 30 Jul 2026 14:17 PM IST

கோவை, ஜூலை 30: முன்பதிவு செய்த பயணத்தைக் கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டு, அதற்கான கட்டணத்தையும் திரும்பத் தராமல் அலட்சியம் காட்டிய பிரபல தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்திற்கு, பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.25,000-க்கும் மேல் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி.. எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்பு?

திடீரென நேர்ந்த ஏமாற்றம்:

கோவையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் தனது சொந்த ஊரான தூத்துக்குடிக்குக் குடும்பத்துடன் சென்று வருவதற்காக, பிரபல தனியார் ஆம்னி பேருந்தில் 4 பேருக்குச் செல்வதற்கும் திரும்புவதற்கும் முறையான கட்டணம் செலுத்தி டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். பயணத்திற்காக பாலமுருகன் தனது குடும்பத்தினருடன் முழுமையாகத் தயாராக இருந்த நிலையில், பேருந்து புறப்படுவதற்குச் சில நேரங்களுக்கு முன்பாக “பேருந்து பழுதாகிவிட்டது” எனக் கூறி ஆம்னி பேருந்து நிறுவனம் பயணத்தை திடீரென ரத்து செய்தது.

கட்டணத்தையும் தர மறுத்து அலட்சியம்:

பயணம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாலமுருகன் குடும்பத்தினர் தூத்துக்குடி செல்ல வேறு மாற்றுப் பேருந்து வசதியையும் ஆம்னி பேருந்து நிறுவனம் செய்து தரவில்லை. அதுமட்டுமன்றி, செல்வதற்கும் திரும்புவதற்கும் முன்பதிவு செய்திருந்த டிக்கெட் கட்டணத் தொகையையும் திரும்பக் கொடுக்க பேருந்து நிர்வாகம் மறுத்துவிட்டது.

இதன் காரணமாகப் பாலமுருகனின் குடும்பத்தினர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, கடைசி நேரத்தில் கூடுதல் செலவு செய்து வேறு பேருந்து மூலம் தூத்துக்குடிக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். இதுகுறித்து நேரில் சென்று நியாயம் கேட்டபோதும் பேருந்து நிர்வாகம் முறையான பதில் அளிக்கவில்லை.

நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு:

தனியார் பேருந்து நிறுவனத்தின் இந்தச் சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பாலமுருகன், வழக்கறிஞர் சம்பத் முத்துக்குமார் மூலமாகக் கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விரிவாக விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி தங்கவேலு மற்றும் உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் அடங்கிய அமர்வு, தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்தின் சேவை குறைபாட்டைக் சுட்டிக்காட்டி அதிரடித் தீர்ப்பளித்தது: பயணி செலுத்திய டிக்கெட் கட்டணத் தொகையான ரூ.5,803-ஐ பேருந்து நிறுவனம் உடனடியாகத் திரும்ப வழங்க வேண்டும்.

இதையும் படிக்க: குடும்பத் தகராறில் மனைவி, மாமியார் வெட்டிப் படுகொலை.. நடுநடுங்க வைக்கும் கொடூரம்!!

இழப்பீடு & வழக்குச் செலவு:

கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்து மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ.20,000 இழப்பீடாகவும், வழக்குச் செலவுத் தொகையையும் சேர்த்து மொத்தம் ரூ.25,000-க்கும் அதிகமான தொகையைப் பாதிக்கப்பட்ட பயணிக்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நுகர்வோரின் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ள இந்த அதிரடித் தீர்ப்பு, பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Follow Us