தமிழகத்துக்கு வினாடிக்கு 3500 கன அடி நீர் திறக்க வேண்டும்.. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
Cauvery Management Authority : காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 3, 500 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
கர்நாட மாநிலத்தில் காவரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கான நீரை திறப்பது தொடர்பாக டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று வியாழக்கிழமை ( ஜூலை 30- ஆம் தேதி) நடைபெற்றது. இதில், தமிழகத்துக்கு வினாடிக்கு 3,500 கன அடி வீதம் 15 நாள்களுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதாவது 4 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும். காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 9.19 டிஎம்சி, ஜூலை மாதம் 31.24 டிஎம்சி என மொத்தம் 40.43 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு கர்நாடக அரசு திறந்து விட வேண்டி இருந்தது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆலோசனை கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இது தொடர்பான உத்தரவை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு வழங்கி இருந்தது.
தமிழகத்துக்கு வினாடிக்கு 3500 கனஅடி நீர்
அதன்படி, காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 3500 கனஅடி நீரை திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு திறந்து விட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதன்படி, இன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை குழு கூட்டத்தில், பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் கேட்கப்பட்டிருந்தன. இந்த கூட்டத்தில், தமிழக அரசு சார்பில், ஏற்கனவே நிலுவையில் இருக்கக்கூடிய தண்ணீரை விடுவிக்காமல் கர்நாடகா அரசு காலம் தாழ்த்தி வருவதாகவும், ஏற்கனவே, ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தங்கள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
மேலும் படிக்க: கோவில் டெண்டர்களில் அதிரடி மாற்றங்கள்.. இனி அனைத்தும் ஆன்லைன்.. அமைச்சர் ரமேஷ் அதிரடி!!




கர்நாடக அரசு தொடர்ந்து எதிர்ப்பு
கர்நாடகா அரசு சார்பில் தங்களுக்கான குடிநீர் தேவை, விவசாயிகளுக்கான நீர் தேவை குறித்த விஷயங்கள் முன்வைக்கப்பட்டன. மழையின்மை காரணமாக அணையில் தற்போது இருப்பில் உள்ள நீர் தரவுகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அணையில் இருக்கக்கூடிய இந்த நீரானது கர்நாடகத்துக்கு தேவையான பயன்பாட்டுக்கும் விவசாய பயன்பாட்டுக்கும் தேவைப்படுகிறது. எனவே, தமிழகத்துக்கு தண்ணீரை திறந்து விட முடியாது என்று வாதம் முன்வைக்கப்பட்டு வந்தது. இருந்தாலும், தமிழகத்தின் நிலையை கருத்தில் கொண்டு இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது.
கர்நாடக அரசு நீதிமன்றத்தை நாட முடிவு
கர்நாடக அரசு சார்பில் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் கூறுகையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முடிவு குறித்து முதல்வர் சிவகுமாருடன் கலந்துரையாடல் நடத்த இருப்பதாகவும், இந்த உத்தரவு குறித்து முதல்வரிடம் எடுத்துரைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடா இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: நாட்டில் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட முதல்வர்கள் – முதல்வர் விஜய்க்கு எந்த இடம்?