AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நாட்டில் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட முதல்வர்கள் – முதல்வர் விஜய்க்கு எந்த இடம்?

இந்தியாவில் மாநில முதல்வர்களில் கிட்டத்தட்ட பாதி பேருக்கு எதிராக குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் நேஷனல் எலெக்ஷன் வாட்ச் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாநில முதல்வர்களின் சொத்து மதிப்பு பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

நாட்டில் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட முதல்வர்கள்  – முதல்வர் விஜய்க்கு எந்த இடம்?
முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 30 Jul 2026 16:10 PM IST

சென்னை, ஜூலை 30 : இந்தியாவில் மாநில முதல்வர்களில் கிட்டத்தட்ட பாதி பேருக்கு எதிராக குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் நேஷனல் எலெக்ஷன் வாட்ச் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, நாட்டில் உள்ள 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களில் 14 பேர் தங்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தேர்தல் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

நாட்டில் குற்ற வழக்குகள் கொண்ட முதல்வர்கள்

மேலும் அந்த பட்டியிலில் உள்ள 11 முதல்வர்கள் மீது, மிக மோசமான குற்ற வழக்குகள் அதாவது அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்கும் மேல் தண்டனை பெறும் வகையிலும் ஜாமீனில் வெளியே வர முடியாத அளவுக்கான குற்றங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக அவர்கள் மீது கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஹைலைட் என்னவென்றால் அந்த பட்டயலில் உள்ள 2 மாநில முதல்வர்கள் மீது கொலை முயற்சி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவம் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க : ஆவின் பால் பாக்கெட்டுகளில் குபீரென வீசிய பிளாஸ்டிக் நெடி.. கொதித்தெழுந்த நுகர்வோர்கள்!!

முதல்வர் விஜய்க்கு எந்த இடம்?

மாநில முதல்வர்களின் சொத்து மதிப்பையும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளதன்படி 31 மாநில முதல்வர்களின் சொத்து விவரங்களை ஆராய்ந்ததில், 4 முதல்வர்களுக்கு ரூ.100 கோடிக்கும் மேல் சொத்து மதிப்பு உள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் கர்நாடக மாநில முதல்வர் டி. சிவக்குமார் ரூ.1,413 கோடியுடன் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ.931 கோடியுடன் இரண்டாமிடத்திலும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ரூ.648 கோடியுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளார்.

அருணாச்சல முதல்வர் பீமா கண்டு ரூ.332 கோடியுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர். இதற்கு நேர்மாறாக, ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா ரூ.55.24 கோடி சொத்துடன் கடைசி இடத்தில் உள்ளார். மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி ரூ.85 லட்சம் சொத்துடனும், ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா ரூ.1,46 கோடி சொத்துடனும் கடைசி இடங்களைப் பிடித்திருக்கிறார்கள். நாட்டில் உள்ள மொத்தம் 31 முதல்வர்களில் தில்லி முதல்வர் ரேகா குப்தா மட்டுமே பெண் முதல்வராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : கோவில் டெண்டர்களில் அதிரடி மாற்றங்கள்.. இனி அனைத்தும் ஆன்லைன்.. அமைச்சர் ரமேஷ் அதிரடி!!

இந்தியாவில் மாநில முதல்வர்களில் பெரும்பாலானோர் பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேற்பட்ட உயர்கல்வி முடித்திருப்பது இந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. அதன்படி 9 மாநில முதல்வர்கள் முதுநிலை பட்டதாரிகளாக உள்ளனர். 7 முதல்வர்கள் பட்டதாரிகளாகவும், 3 மாநில முதல்வர்கள் முதுநிலை பட்டம் பெற்றவர்களாகவும் உள்ளனர். மீதமுள்ள முதல்வர்கள் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு வரை படித்திருக்கிறார்கள்.

Follow Us