AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பெர்சனல் லோன்: மாதத் தவணை செலுத்த தவறினால் சிறை தண்டனை விதிக்கப்படுமா? உண்மை என்ன?

நம்மால் மாதத் தவணை செலுத்த முடியாமல் போகும்போது, நான் சிறைக்குச் செல்ல நேரிடுமா? என்ற பொதுவான அச்சம் எழுகிறது. இந்த நிலையில் சட்டப்படி, கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதது ஒரு குற்றமல்ல என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பெர்சனல் லோன்: மாதத் தவணை செலுத்த தவறினால் சிறை தண்டனை விதிக்கப்படுமா? உண்மை என்ன?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 30 Jul 2026 18:44 PM IST

சமீப காலமாக மொபைல் செயலி அல்லது வங்கி மூலம் பெர்சனல் லோனை சில நிமிடங்களிலேயே பெற முடிகிறது. கடன் தொகையும் உடனடியாக உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஆனால், வேலை இழக்கும்போது அல்லது தொழில் தோல்வியடையும் சூழலில், மாதத் தவணை முறையாகச் செலுத்த முடியாமல் போகலாம். நம்மால் மாதத் தவணை செலுத்த முடியாமல் போகும்போது, நான் சிறைக்குச் செல்ல நேரிடுமா? என்ற பொதுவான அச்சம் எழுகிறது. இந்த நிலையில் சட்டப்படி, கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதது ஒரு குற்றமல்ல. உங்கள் நோக்கம் நேர்மையானதாக இருந்து, பொருளாதார சூழ்நிலைகள் காரணமாக உங்களால் தவணையைச் செலுத்த முடியாவிட்டால், அதற்காக மட்டும் உங்களைச் சிறைக்கு அனுப்ப முடியாது.

மாதத் தவணை செலுத்தத் தவறினால் வங்கி என்ன செய்யும்?

தொடர்ந்து தவணையைச் செலுத்தத் தவறினால், வங்கி உடனடியாகக் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதில்லை. ஆரம்பத்தில், தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் பணம் செலுத்துமாறு நினைவூட்டப்படும். அதைத் தொடர்ந்து, சட்டப்பூர்வமாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்படும். நீண்ட காலத்திற்கு நிலுவைத் தொகை செலுத்தப்படாமல் இருந்தால், வங்கி உங்கள் கடன் கணக்கை செயல்படாத சொத்து என வகைப்படுத்தும். இதனால் ஏற்படும் மிக முக்கியமான பாதிப்பு உங்கள் சிபில் ஸ்கோரில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதையும் படிக்க : Gold : கையில் ரூ.1 லட்சம் இருந்தால் எவ்வளவு தங்கம் வாங்கலாம்?.. இந்த கணக்கை தெரிந்துக்கொள்ளுங்கள்!

குறைந்த சிபில் ஸ்கோர் இருந்தால், எதிர்காலத்தில் புதிய கடன் அல்லது கிரெடிட் கார்டு பெறுவதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும். இதைத் தொடர்ந்து, நீதிமன்றங்கள் மூலம் நிலுவைத் தொகையை வசூலிக்க வங்கி சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கலாம். கடனுக்காக ஏதேனும் பிணையம் வழங்கியிருந்தால், அந்தச் சொத்து மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம்.

எந்தச் சூழல்களில் சிறைத்தண்டனைக்கான அபாயம் உள்ளது?

முன்பே குறிப்பிட்டது போல, உண்மையான நெருக்கடி காரணமாகத் தவணையைச் செலுத்தத் தவறுவது குற்றமல்ல. மோசடி தொடர்பான நிகழ்வுகளில் மட்டுமே சிறைத்தண்டனைக்கான அபாயம் எழுகிறது. உதாரணமாக, போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி கடன் பெறுவது, வேலை அல்லது வருமானம் குறித்து வங்கியிடம் பொய் சொல்வது அல்லது பணத்துடன் வேண்டுமென்றே தலைமறைவாகிவிடுவது போன்றவை. இத்தகைய சூழல்களில், வங்கி நேரடியாகக் காவல்துறையை அணுகி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யலாம்; இது குற்றவியல் வழக்குக்கு வழிவகுக்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வங்கியை வேண்டுமென்றே ஏமாற்றுவதற்கும், தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாகக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போவதற்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

இதையும் படிக்க : தபால் சேவைகளுக்கான கட்டணங்களை மாற்றிய தபால் துறை.. ஆவணங்களுக்கு குறைந்த விலை!

கடன் வசூலிப்பவர்களின் அச்சுறுத்தல்களை எவ்வாறு கையாள்வது?

கடன் தவணையைச் செலுத்தத் தவறியவர்கள் பெரும்பாலும் கடன் வசூலிப்பவர்களைக் கண்டும் அஞ்சுகிறார்கள். இருப்பினும், இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் இது தொடர்பாகச் சாமானிய மக்களுக்குப் பாதுகாப்பையும் அதிகாரத்தையும் அளிக்கின்றன. நிலுவைத் தொகையை வசூலிக்கக் கடன் மீட்பு முகவர்கள் உங்களை அழைக்கலாம் அல்லது உங்கள் வீடு அல்லது அலுவலகத்திற்கு வரலாம்.

ஆனால், அவர்கள் உங்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளவோ, தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தவோ அல்லது மிரட்டவோ எவ்வித உரிமையும் இல்லை. நள்ளிரவிலோ அல்லது பொருத்தமற்ற நேரங்களிலோ அழைத்து அவர்கள் உங்களைத் தொந்தரவு செய்யக்கூடாது. ஏதேனும் ஒரு முகவர் வரம்பை மீறினாலோ அல்லது உங்களை அவமானப்படுத்த முயன்றாலோ, காவல் துறையிடமோ அல்லது ரிசர்வ் வங்கியிடமோ புகார் அளிக்கத் தயங்க வேண்டாம். இத்தகைய விஷயங்களில் சட்டம் உங்களுக்கு முழுமையான பாதுகாப்பை அளிக்கிறது.

Follow Us