Gold Price : மீண்டும் சரிந்த தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு?.. இன்றைய விலை நிலவரம்!
Gold and Silver Price On October 06, 2026 | சென்னையில் தங்கம் விலை நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வரும் நிலையில், இன்று மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, அக்டோபர் 06 : சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை (Gold Price) தொடர் சரிவை சந்தித்து வரும் நிலையில், இன்று (அக்டோபர் 06, 2026) தங்கம் விலை மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 சரிந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Silver Price) நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தொடர் சரிவை சந்தித்து வரும் தங்கம் விலை
2026 ஆம் ஆண்டு தங்கத்திற்கு சிறப்பானதாக அமையவில்லை. காரணம், ஆண்டின் தொடக்கத்தில் உச்சத்தில் இருந்த தங்கம் படிப்படியாக சரிவை சந்தித்து வந்தது. இந்த நிலையில் தான், தங்கம் சரிவை சந்தித்தாலும் ஆண்டின் இறுதியில் மீண்டும் விலை உயர்வை சந்திக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கூறி வந்தனர். ஆனால், தற்போது நிலமை தலைகீழாக உள்ளது. காரணம், தங்கம் விலை தற்போது தொடர் சரிவை சந்தித்து வருகிறது.
இதையும் படிங்க : நிலையான வைப்பு நிதி திட்டம்.. முதலீடு செய்வதற்கு முப்பு இவற்றை தெரிந்துக்கொள்ளுங்கள்!
ரூ.13,000-க்கு வந்த தங்கம் விலை
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தாலும் ஒரு கிராம் ரூ.14,000-க்கு கீழ் செல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தான், தற்போது தங்கம் விலை ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் தங்கம் விலை ரூ.13,000-க்கு கீழ் செல்லுமா என்ற எதிர்ப்பார்ப்பும் பொதுமக்கள் மத்தியில் எழ தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க : தங்கம் குறித்த ஷாக் கணிப்பை வெளியிட்ட Bank Of India.. என்ன தெரியுமா?
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.13,660-க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,09,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,902-க்கும், ஒரு சவரன் ரூ.1,19,216-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.