Gold Price : டிவிஸ்ட் வைத்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன?
Gold and Silver Price In Chennai On October 5th | சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.
சென்னை, அக்டோபர் 05 : சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold and Silver Price) மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், இன்று (அக்டோபர் 05, 2026) தங்கம் விலை டிவிஸ்ட் கொடுத்துள்ளது. அதாவது, தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தொடர் சரிவை சந்திக்கும் தங்கம் விலை
கடந்த சில மாதங்களாக தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த தங்கம் விலை, அக்டோபர் மாதம் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. குறிப்பாக ஜனவரி மாதத்தில் ரூ.15,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம், தற்போது ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இவ்வாறு தொடர் சரிவை சந்தித்து வரும் பட்சத்தில் ஒரு கிராம் ரூ.12,000-க்கு குறையும் என பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் தான் தங்கம் விலை இன்று டிவிஸ்ட் அடித்துள்ளது.
இதையும் படிங்க : இனி குறைந்தபட்ச பிஎஃப் பங்களிப்பு ரூ.3,000.. EDLI காப்பீடு வரம்பு உயருமா?
டிவிஸ்ட் அடித்த தங்கம் விலை – இன்றைய நிலவரம்
சென்னையில் இன்று (அக்டோபர் 05, 2026) 22 காரட் தங்கம் எந்த வித மாற்றத்தையும் சந்திக்காமல் ஒரு கிராம் ரூ.13,675-க்கும், ஒரு சவரன் ரூ.1,09,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,918-க்கும், ஒரு சவரன் ரூ.1,19,344-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையிலும் மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : தீபாவளியின்போது தங்கம் விலை குறையுமா, உயருமா?.. கணிப்புகள் கூறுவது என்ன?
தொடர் சரிவில் தங்கம் – காரணம் என்ன?
அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்துள்ளதும் தான் தற்போதை விலை சரிவுக்கு முக்கிய காரணிகளாக உள்ளன. அமெரிக்க மத்திய வங்கி, டிசம்பர் மாதத்திற்குள் மேலும் ஒருமுறை வட்டி விகிதத்தை உயர்த்தும் பட்சத்தில் தங்கம் விலை மேலும் சரிவை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.