தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்.. யாரெல்லாம் தகுதி உடையவர்கள்.. தெரிந்துக்கொள்ளா வேண்டிய முக்கிய விஷயங்கள்!
Thai Maman Thanga Modhiram Scheme | தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். இந்த நிலையில், இந்த திட்டத்தில் பயன்பெற யாரெல்லாம் தகுதியுள்ளவர்கள் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தேர்தல் பிரசாரத்தில் அறிவித்ததை போலவே, ஆட்சி அமைத்த பிறகு தமிழக வெற்றிக் கழக (TVK – Tamilaga Vettri Kazhagam) அரசு தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை (Thai Maman Thanga Modhiram Scheme) தொடங்கியுள்ளது. ஜூன் 22, 2026 முதலே இந்த திட்டத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் பயன்பெற என்ன என்ன தகுதிகள் வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டன் ஜூன் மாதம் முதலே செயல்பாட்டில் உள்ள நிலையில், செப்டம்பர் 28, 2026 அன்று தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இந்த திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் முதற்கட்டமாக சுமார் 1.28 லட்சம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பொது வருங்கால வைப்பு நிதி.. மாதம் ரூ.10,000 முதலீடு செய்து ரூ.31 லட்சம் பெறலாம்.. எப்படி?




திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
இந்த தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 1 கிராம் 22 காரட் தங்க மோதிரம் வழங்கப்படும். இந்த மோதிரத்தில் தமிழ்நாடு அரசின் சின்னம், பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை மற்றும் தனிப்பட்ட வரிசை எண் ஆகியவை இடம்பெற்றிருக்கும். இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு சுமார் 4.2 லட்சம் முதல் 4.4 லட்சம் குழந்தைகள் வரை பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க : கேஸ் சிலிண்டருக்கு கேஒய்சி மேற்கொள்ளவில்லையா?.. இனி மானிய விலையில் கேஸ் சிலிண்டர் கிடைக்காது!
திட்டத்தில் பயன்பெற என்ன என்ன தகுதிகள்?
- தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். வெளி மாநிலத்தை சேர்தவர்கள் அல்லது தற்காலிகமாக தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது.
- குழந்தை அரசு மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனை, மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் பிறந்திருக்க வேண்டும்.
- தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கப்படாது.
- இந்த திட்டத்தில் பயன்பெற தாய் அமைப்பில் பதிவு செய்து, அடையாள் எண் பெற்றிருக்க வேண்டும்.
மேலே கூறப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்தால் மட்டுமே தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் மோதிரம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.