கேஸ் சிலிண்டருக்கு கேஒய்சி மேற்கொள்ளவில்லையா?.. இனி மானிய விலையில் கேஸ் சிலிண்டர் கிடைக்காது!
LPG Gas Subsidy Halted | எல்பிஜி கேஸ் சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளவர்கள் கேஒய்சி மேற்கொள்ள வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் தான், கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு கேஒய்சி மேகொள்ளாதவர்களுக்கு மானியம் கிடைக்காது என அரசு அறிவித்துள்ளது.
எல்பிஜி கேஸ் சிலிண்டர் (LPG Gas Cylinder) பயனர்கள், ஆதார் (Aadhaar) கேஒய்சி (KYC – Know Your Customer) சரிப்பார்ப்பை மேற்கொள்ள வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் சில பயனர்கள் தங்கள கேஸ் சிலிண்டர் இணைப்புக்கான கேஒய்சியை மேற்கொள்ளாமல் உள்ளனர். இந்த நிலையில் தான், அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது, கேஸ் சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளவர்கள் கேஒய்சி மேற்கொள்ளவில்லை என்றால் அவர்களுக்கு மானியம் கிடைக்காது என அறிவித்துள்ளது. அரசின் இந்த முக்கிய நடவடிக்கை குறித்து விரிவாக பார்க்கலாம்.
எல்பிஜி கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு கேஒய்சி கட்டாயம்
எல்பிஜி கேஸ் சிலிண்டர் இணைப்பு வைத்துள்ள சில தகுதியுள்ள பயனர்களுக்கு மானிய விலையில் கேஸ் சிலிண்டர் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தான், மத்திய அரசு முக்கிய டிவிஸ்ட் வைத்துள்ளது. அதாவது, கேஒய்சி முடிக்காதவர்கள் இனி மானிய விலையில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியாது என கூறப்பட்டுள்ளது. இந்த கேஸ் சிலிண்டர் கேஒய்சி முடிக்க செப்டம்பர் 30, 2026 வரை கடைசி தேதி வழங்கப்பட்ட நிலையில், அக்டோபர் 01, 2026 முதல் இது அமலுக்கு வந்துள்ளது.
இதையும் படிங்க : “கார்டு இல்லாமலேயே ATM-ல் பணம் எடுக்கலாம்!”.. வங்கி பரிவர்த்தனையில் அடுத்தகட்ட பாய்ச்சல்!!
பலமுறை நீட்டிக்கப்பட்ட கேஸ் சிலிண்டர் கேஒய்சி முறை
2023 ஆம் ஆண்டு முதலே அரசு இந்த கேஸ் சிலிண்டர் கேஒய்சி முறையை கையில் எடுத்துள்ளது. அது முதலே கேஒய்சி முடிக்க வேண்டும் என பொதுமக்களை வலியுறுத்தி வரும் நிலையில், சமீப காலமாக அதனை தீவிரப்படுத்தியுள்ளது. அதாவது, இந்த கேஸ் சிலிண்டர் கேஒய்சி முடிக்க ஜூன் 30, 2026, ஜூலை 31, 2026 என தேதி மாற்றம் செய்யப்பட்டது. அப்போதும் ஏராளமான பயனர்கள் கேஒய்சி முடிக்கவில்லை என்பதால் ஆகஸ்ட் 07, 2026, ஆகஸ்ட் 15, 2026, ஆகஸ்ட் 31, 2026, செப்டம்பர் 07, 2026, செப்டம்பர் 14, 2026 மற்றும் செப்டம்பர் 30, 2026 வரை கால அவகாசம் நீட்டித்து வழங்கப்பட்டது.
இதையும் படிங்க : ஹைப்ரிட் கார்கள் அதிக மைலேஜ் தருவது எப்படி? எஞ்சின் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?
தற்போது மத்திய அரசு கால அவகாசம் வழங்குவதை நிறுத்திவிட்ட நிலையில், இந்த முறை அமலுக்கு வந்துள்ளது.



