பொது வருங்கால வைப்பு நிதி.. மாதம் ரூ.10,000 முதலீடு செய்து ரூ.31 லட்சம் பெறலாம்.. எப்படி?
Public Provident Fund Investment Plan | அஞ்சலக பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாதம் ரூ.10,000 முதலீடு செய்து ரூ.31 லட்சம் லாபம் பெறலாம். இந்த நிலையில், பிபிஎஃப் திட்டத்தில் எப்படி முதலீடு செய்து, எப்படி லாபம் பெறலாம் என பார்க்கலாம்.
சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்தால் மட்டும் தான் அதனை பல மடங்காக உயர்த்த முடியும். மனிதர்களுக்கு எப்போதுமே பண தேவை இருந்துக்கொண்டே இருக்கும் என்பதால் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு முதலீடு செய்வது நிதி சிக்கல்களில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க உதவியாக இருக்கும். உதாரணமாக பிள்ளைகளின் கல்வி செலவு, வீடு கட்ட தேவையான பணம், நகை வாங்க என தேவைகளுக்கு ஏற்ப முதலீடு செயவ்து சிறந்ததாக இருக்கும்.
இந்த நிலையில், பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் (PPF – Public Provident Fund Scheme) மாதம் ரூ.10,000 முதலீடு செய்வதன் மூலம் ரூ.36 லட்சம் வருமானம் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்
அஞ்சலகங்கள் மூலம் அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும். 7.1 சதவீதம் வட்டி கொண்ட இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகளாக உள்ளது. அதாவது, இந்த திட்டத்தில் 15 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்யும் பட்சத்தில் நல்ல லாபத்தை பெற முடியும்.
இதையும் படிங்க : “கார்டு இல்லாமலேயே ATM-ல் பணம் எடுக்கலாம்!”.. வங்கி பரிவர்த்தனையில் அடுத்தகட்ட பாய்ச்சல்!
ரூ.10,000 முதலீடு செய்து ரூ.36 லட்சம் பெறலாம் – எப்படி?
நீங்கள் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் கணக்கு தொடங்கி மாதம் ரூ.10,000 முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் ஒரு ஆண்டுக்கு ரூ.1,20,000 முதலீடு செய்திருப்பீர்கள். திட்டத்தின் முதிர்வு காலமான 15 ஆண்டுகளும் இதனை நீங்கள் தொடர்ந்து செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு மொத்தமாக ரூ.18,00,000 முதலீடு சேர்ந்திருக்கும்.
இதையும் படிங்க : Gold Price : மீண்டும் சரிந்த தங்கம் விலை.. ரூ.13,000-க்கு கீழ் செல்லுமா?
இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், வட்டியாக மட்டுமே ரூ.13.56 லட்சம் கிடைக்கும். இதன் மூலம் முதலீடு செய்த தொகை ரூ.18 லட்சம் மற்றும் அதற்கான வட்டி ரூ.13.56 லட்சம் ஆகியவை சேர்த்து மொத்தமாக ரூ.31.56 லட்சம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



