ரேஷன் கார்டு KYC மேற்கொள்ளவில்லை என்றால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காதா?.. தமிழ்நாடு அரசு எடுத்த முக்கிய முடிவு!
Ration Card Aadhaar Biometric Update Mandatory | இந்தியா முழுவதும் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள் அதில் கேஒய்சி மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் என அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் தான், மத்திய அரசின் முடிவுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்கள் ரேஷன் அட்டை (Ration Card) திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றன. ரேஷன் கார்டு திட்டங்கள் உரிய மக்களை சென்று சேரும் வகையில், ரேஷன் கார்டில் உள்ளவர்கள் அனைவரும் தங்களது ஆதார் (Aadhaar) அடிப்படையிலான பயோமெட்ரிக் விவரங்களை (Biometric Details) ரேஷன் கார்டில் அப்டேட் செய்ய வேண்டும் என்பது அவசியமாக உள்ளது. அவ்வாறு பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்யாதவர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு கூறியுள்ள நிலையில், அது தொடர்பான முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
ரேஷன் கார்டில் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்வது கட்டாயம்
ரேஷன் கார்டு மூலம் ஏராளமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் ரேஷன் கார்டு மூலம் நடைபெறும் மோசடிகளை தடுக்கவும், உரிய பயனர்களுக்கு மட்டும் சேவைகள் சென்று சேருவதை உறுதி செய்யவும் ரேஷன் கார்டில் உள்ள அனைத்து பயனர்களும் தங்களது ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதையும் படிங்க : ஹைப்ரிட் கார்கள் அதிக மைலேஜ் தருவது எப்படி? எஞ்சின் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?
அரசின் அறிவுரையின் படி ஏராளமான பயனர்கள் தங்களது ரேஷன் கார்டில் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்துள்ள நிலையில், இன்னும் சில அப்டேட் செய்யாமல் உள்ளனர். அவ்வாறு பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்யாத ரேஷன் அட்டைகளுக்கு உணவு பொருட்களை வழங்க வேண்டாம் என மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு
மத்திய அரசின் இந்த உத்தரவின் மூலம், தங்களுக்கு உணவு பொருட்கள் கிடைக்காதோ என பொதுமக்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்த நிலையில் தான், எந்த ஒரு ரேஷன் அட்டைதாரருக்கும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதை நிறுத்தவோ, தடை செய்யவோ கூடாது என அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க : Gold Price : மீண்டும் சரிந்த தங்கம் விலை.. ரூ.13,000-க்கு கீழ் செல்லுமா?
இது ரேஷன் அட்டை பயனர்களுக்கு குறுகிய கால நிவாரணத்தை கொடுத்தாலும், ரேஷன் அட்டை பயனர்கள் தொடர்ந்து பொருட்கள் மற்றும் சேவைகளை பெற கட்டாயம் கேஒய்சி மேற்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது.



