AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இனி குறைந்தபட்ச பிஎஃப் பங்களிப்பு ரூ.3,000.. EDLI காப்பீடு வரம்பு உயருமா?

EPFO PF Salary Limit Hiked to 25000 Rupees | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பிஎஃப் உச்ச வரம்பை ரூ.25,000 ஆக உயர்த்தியுள்ளது. இந்த நிலையில், காப்பீட்டு தொகையும் உயருமா என்ற கேள்வி பயனர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இனி குறைந்தபட்ச பிஎஃப் பங்களிப்பு ரூ.3,000.. EDLI காப்பீடு வரம்பு உயருமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 04 Oct 2026 11:39 AM IST

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) சில முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. அதன் மூலம் பிஎஃப் (PF – Provident Fund) கணக்கு வைத்திருக்கும் நபர்களுக்கு இந்த மாதம் முதல் பல்வேறு மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. குறிப்பாக பிஎஃப் சம்வள வரம்பு ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.25,000 அடிப்படை சம்பளம் பெறும் பலருக்கும் தங்களது பிஎஃப் பங்களிப்பு விகிதம் இந்த மாதம் முதல் அதிகரிக்க உள்ளது.

இந்த நிலையில் தான், பிஎஃப் சம்பள வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதை போலவே, இலவச காப்பீட்டு தொகையும் உயர்த்தப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : கேஸ் சிலிண்டருக்கு கேஒய்சி மேற்கொள்ளவில்லையா?.. இனி மானிய விலையில் கேஸ் சிலிண்டர் கிடைக்காது!

இனி குறைந்தபட்ச பிஎஃப் பங்களிப்பு ரூ.3,000

கடந்த மாதம் வரை பிஎஃப் உச்ச வரம்பு ரூ.15,000 ஆக இருந்தது. அதில் 12 சதவீதம் ஊழியர்களின் சார்பிலும், 12 சதவீதம் நிறுவனத்தின் சார்பிலும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த வரம்பை அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதாவது, பிஎஃப் உச்ச வரம்பு ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, இனி ரூ.25,000-ல் 12 சதவீதம் பணம் பிடித்தம் செய்யப்படும். அப்படியென்றால் மாதம் மாதம் ஊழியர்களின் பிஎஃப் கணக்குக்கு அவர்களது சம்பளத்தில் இருந்து ரூ.3,000 வரவு வைக்கப்படும்.

இதையும் படிங்க : ரேஷன் கார்டு KYC மேற்கொள்ளவில்லை என்றால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காதா?.. தமிழ்நாடு அரசு எடுத்த முக்கிய முடிவு!

காப்பீட்டு தொகையும் அதிகரிக்குமா?

பிஎஃப் உச்ச வரம்பு அதிகரித்துள்ள நிலையில், பிஎஃப் உடன் தொடட்புடைய காப்பீட்டு திட்டமான EDLI (Employee Deposit Linked Insurance) கீழ் கிடைக்கும் காப்பீட்டு தொகையும் உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பிஎஃப் உச்ச வரம்பை உயர்த்தினால் காப்பீட்டு தொகையும் அதிகரிக்க வேண்டும். தற்போது காப்பீட்டு தொகை ரூ.7 லட்சமாகவே உள்ளது. இது தொடர்பாக அரசும், இபிஎஃப்ஓ அமைச்சகமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும்போது தான் காப்பீட்டு தொகை ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us