AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold Price : ஒரே நாளில் ரூ.800 சரிந்த தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு?

Gold Price Increased Silver Price Remain Same In Chennai | சென்னையில் நாளுக்கு நாள் தங்கம் விலை கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை சரிந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது.

Gold Price : ஒரே நாளில் ரூ.800 சரிந்த தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 03 Oct 2026 11:29 AM IST

அக்டோபர் 03, சென்னை : சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை (Gold Price) தொடர் சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்று (அக்டோபர் 03, 2026) தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்துள்ளது. தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் (Silver Price) எந்தவித மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில்,  இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொடர் சரிவை சந்தித்து வரும் தங்கம் விலை

புவிசார் பதற்றம், தங்கத்தின் தேவை மற்றும் இறுப்பு ஆகியவற்றின் காரணமாக தங்கம் விலையில் நாள்தோறும் மாற்றம் வரும். அந்த வகையில் சர்வதேச சந்தையில் கச்ச எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை மாற்றாமல் இருக்க முடிவு செய்துள்ளது ஆகியவை முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் இருந்து திரும்பி வேறு முதலீடுகளில் கவனம் செலுத்த வைக்க தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க : Gold Price : மீண்டும் சரிந்த தங்கம் விலை.. ரூ.13,000-க்கு கீழ் செல்லுமா?

இந்த நிலையில் தான், தங்கம் தற்போது தொடர் விலை சரிவை சந்திக்க தொடங்கியுள்ளது. அதாவது, கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.5,000 வரை சரிவை சந்தித்துள்ளது. தங்கம் விலை இத்தகைய சரிவை சந்தித்து வரும் நிலையில், தங்கத்தில் தற்போது முதலீடு செய்யலாமா, வேண்டாமா என முதலீட்டாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.100 சரிவை சந்தித்து ஒரு கிராம் ரூ.13,675-க்கும், சவரனுக்கு ரூ.800 சரிந்து ஒரு சவரன் ரூ.1,09,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல 24 காரட் தங்கமும் விலை சரிந்து ஒரு கிராம் ரூ.14,918-க்கும், ஒரு சவரன் ரூ.1,19,344-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : வணிக கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தாலும் ஆண்டின் இறுதியில் விலை உயர்வை சந்திக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இந்த நிலையில், தங்கம் தொடர் சரிவை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Follow Us