AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முனியம்மாள் கிளப்பிவிட்ட பிரச்சனை… பிக்பாஸில் பூகம்பமாக வெடித்த சண்டை – வைரலாகும் வீடியோ!

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தற்போது 5-வது வாரம் எட்டியுள்ள நிலையில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இடையே கடுமையான சண்டை நடைபெறுவது போன்ற வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

முனியம்மாள் கிளப்பிவிட்ட பிரச்சனை… பிக்பாஸில் பூகம்பமாக வெடித்த சண்டை – வைரலாகும் வீடியோ!
பிக்பாஸ் தமிழ்
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Oct 2026 10:28 AM IST

தமிழ் சின்னத்திரையில் தொடர்ந்து கடந்த 9 சீசன்களாக நல்ல வரவேற்பைப் பெற்று வந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி தற்போது 10-வது சீசனிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கும் போதே ஒரு புது ட்விஸ்டுடனே தொடங்கியது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் என்று அழைத்துவரப்பட்ட அனைவரும் இந்த வீட்டிற்குள் செல்லவில்லை. அங்கு உள்ள மக்களின் தேர்வின் அடிப்படையிலேயே போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர். அங்கு தொடங்கிய ட்விஸ்ட் ஒவ்வொரு வாரமும் புது புது ட்விஸ்ட்களுடன் ஒளிபரப்பாகி வருகின்றது. அதன்படி கடந்த 4-வது வாரம் மூன்று போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் வார இறுதியில் மூன்று போட்டியாளர்கள் வைல்கார்ட் போட்டியாளர்களாக உள்ளே நுழைந்தனர்.

அப்படி தற்போது வைல்கார்ட் போட்டியாளர்களாக பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சிக்கு உள்ளே வந்த அக்‌ஷிதா, டிடிஎஃப் வாசன் மற்றும் கரிஷ்மா இவர்கள் மூவருக்கும் இடையே நேற்று இந்த வார வீட்டின் லீடருக்கான போட்டி நடைப்பெற்றது. அதில் அக்‌ஷிதா வெற்றிப் பெற்று தற்போது வீட்டின் தலைவராக தேர்வாகியுள்ளார். இந்த நிலையில் வீட்டில் உள்ள போட்டியாளர்களும் ஆளும் அணி எதிரணி என இரண்டு அணிகளாக பிரிந்து உள்ளனர். நேற்று இந்த வாரத்திற்கான முதல் டெமோகிரஷி மீட்டிங் நடைபெறும் போதே போட்டியாளர்களிடையே சண்டை தொடங்கியது.

பிக்பாஸில் பூகம்பமாக வெடித்த சண்டை – வைரலாகும் வீடியோ:

இந்த நிலையில் இன்று 30-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் டைனிங் டேபிலில் வினோத் பாபு, அன்சர் மற்றும் அவினாஷ் ஆகியோர் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது அந்த டேபிலில் ஈ அடிக்கிறார் முனியம்மாள். அதனை அவினாஷ் கேள்வி கேட்க அவரை வெறுப்பேற்றும் விதமாக முனியம்மாள் நடந்துகொள்கிறார். இதனால் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் இடையேயும் சலசலப்பு ஏற்படுவது போன்று அந்த வீடியோவில் காட்டப்படுகின்றது. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… பிக்பாஸில் ஷமாவிற்கு எதிராக கேள்விகளை அடுக்கும் போட்டியாளர்கள்… வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சிக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… விஜய் சேதுபதி அடுத்ததாக இந்த இயக்குநர் படத்தில் நடிக்க போறாரா? வைரலாகும் தகவல்

Follow Us