வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள்.. மிஸ் செய்தால் எவ்வளவு அபராதம்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
Income Tax Filing Last Date | ஒவ்வொரு நிதியாண்டும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், 2026 - 2027 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.
2026 – 2027 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் (Income Tax Filing) செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (ஜூலை 31, 2026) நிறைவடைகிறது. 2025 ஆம் ஆண்டு வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை வருமான வரித்துறை ஆகஸ்ட் 31 ஆக நீட்டித்தது. அதேபோல இந்த ஆண்டும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதுவரை அது குறித்து எந்தவித தகவலும் வெளியே வராமல் உள்ளது. இந்த நிலையில், வருமான வரி தாக்கல் செய்வது எப்படி, வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன ஆகும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வருமான வரி தாக்கல்
இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஆண்டு வருமான ஈட்டும் நபர்கள், ஒவ்வொரு நிதியாண்டும் வருமான வரி செலுத்த வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. அந்த வகையில் ஐடிஆர் -1 மற்றும் ஐடிஆர் -2 படிவங்களை பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்யும் நபர்களுக்கு இன்று வரி தாக்கல் செய்ய கடைசி நாளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, மாத ஊதியம் பெறும் நபர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தணிக்கை செய்ய அவசியம் இல்லாதவர்கள், சொத்துக்கள் விற்பனை மூலம் கிடைக்கும் ஆதாயம், டெபாசிட் வட்டி, பங்குச்சந்தை மூலதன ஆதாயம் பெறுவோர் ஆகியோர் இன்று வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும்.
இதையும் படிங்க : பெர்சனல் லோன்: மாதத் தவணை செலுத்த தவறினால் சிறை தண்டனை விதிக்கப்படுமா? உண்மை என்ன?




வருமான வரி தாக்கல் செய்வது எப்படி?
- வருமான வரி தாக்கலை ஒருவர் நேரடியாக வருமான வரித்துறையின் இந்த https://www.incometax.gov.in என்ற இணையதளம் மூலம் மேற்கொள்ளலாம்.
- அந்த இணையதளத்திற்கு சென்று தற்போதைய மதிப்பீடு ஆண்டு (2026 -2027) தேர்வு செய்ய வேண்டும்.
- பிறகு தங்களுக்கான உரிய ஐடிஆர் படிவத்தையும் தேர்வு செய்ய வேண்டும்.
- பிறகு அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பதிவு செய்து, ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலே குறிப்பிட்டுள்ள முறைப்படி வருமான வரி தாக்கல் செய்வது மட்டுமன்றி, அதனை இ வெரிஃபை (e Verify) செய்வது மிகவும் அவசியமாக உள்ளது.
இதையும் படிங்க : வருமான வரி மட்டும் தாக்கல் செய்தால் போதாது.. இந்த விஷயம் முக்கியம்.. இல்லனா Reject ஆகிவிடும்!
ஐடிஆர் தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்?
வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் அதற்கான கூடுதல் வரி செலுத்த வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இன்று (ஜூலை 31, 2026) கடைசி தேதியை தவற விட்டால் டிசம்பர் 31, 2026 வரை வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். இந்த நிலையில், டிசம்பர 31 வரையிலான காலக்கட்டத்தில் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை கூடுதலாக வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.