வருமான வரி மட்டும் தாக்கல் செய்தால் போதாது.. இந்த விஷயம் முக்கியம்.. இல்லனா Reject ஆகிவிடும்!
e Verification For Income Tax Filing | வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நாளை (ஜூலை 31, 2026) உடன் முடிவடைகிறது. இந்த நிலையில், வருமான வரியை மட்டும் தாக்கல் செய்யாமல் இந்த விஷயத்தையும் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது.
2026 – 2027 ஆம் நிதியாண்டுக்கான (2026 – 2027 Financial Year) வருமான வரி தாக்கல் (Income Tax Filing) செய்வதற்கான கால அவகாசம் நாளை (ஜூலை 31, 2026) உடன் முடிவடைகிறது. இதன் காரணமாக பலரும் மிகவும் விறுவிறுப்பாக வருமான வரி தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், வருமான வரியை மட்டும் தாக்கல் செய்துவிட்டு இந்த ஒரு விஷயத்தை செய்யவில்லை என்றால் வருமான வரி செல்லாது என கூறப்படுகிறது. அது என்ன விஷயம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வருமான வரி தாக்கலில் இந்த விஷயம் மிகவும் அவசியம்
வருமான வரி தாக்கல் செய்வது எந்த அளவுக்கு முக்கியமோ, அதா அளவுக்கு இ வெரிஃபிகேஷன் (e Verification) செய்வதும் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆனால், பெரும்பாலான நபர்கள் இப்படி ஒரு விஷயம் இருப்பது குறித்து கண்டுக்கொள்வதே இல்லை. வரி தாக்கல் செய்யும் நபர்கள், வருமான வரியை தாக்கல் செய்த பிறகு குறிப்பிட்ட காலக்கெடுக்குள் இந்த இ வெரிஃபிகேஷனை மேற்கொள்ள வேண்டும். இல்லை என்றால், அந்த வருமான வரி தாக்கல் செல்லாததாக கருதப்படும்.
இதையும் படிங்க : தபால் சேவைகளுக்கான கட்டணங்களை மாற்றிய தபால் துறை.. ஆவணங்களுக்கு குறைந்த விலை!
இ வெரிஃபிகேஷன் ஏன் அவசியம்?
வருமான வரி தாக்கல் செய்த ஒவ்வொருவரும் இந்த இ வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும். உண்மையிலேயே வரி செலுத்தும் நபர் தான் வருமான வரி தாக்கல் செய்கிறாரா என்பதை உறுதி செய்வதற்காக தான் இந்த இ வெரிஃபிகேஷன் முறை அமலில் உள்ளது. அதாவது, வருமான வரி தாக்கல் செய்த நபர், தான் வழங்கிய அனைத்து விவரங்களும் உண்மை தான் என்பதை உறுதி செய்யும் செயல்முறை தான் இது.
இதையும் படிங்க : கடந்த ஆண்டுக்கான வருமான வரியை இந்த ஆண்டு செலுத்தலாமா?.. வருமான வரித்துறை விதிகள் கூறுவது என்ன?
இ வெரிஃபிகேஷன் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்?
இ வெரிஃபிகேஷன் செய்தால் மட்டும் தான் வருமான வரித்துறை, உங்களது வருமான வரி தாக்கல் ஏற்றுக்கொள்ளும். இல்லை என்றால் நீங்கள் மீண்டும் முதலில் இருந்து வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.