AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தொடர்ந்து 3வது நாளாக அதிகரித்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து விற்பனை..

ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்து தங்கம் விலை சரிவைக் கண்டு வந்த நிலையில், வாடிக்கையாளர்கள் அதிகளவில் நகைகளை வாங்கத் தொடங்கினர். ஆனால், கடந்த சில நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவதால், தற்போது தங்கத்தை வாங்கலாமா அல்லது மீண்டும் விலை குறையுமா என்று காத்திருக்கும் நிலை வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து 3வது நாளாக அதிகரித்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து விற்பனை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 31 Jul 2026 10:32 AM IST

ஜூலை 31, 2026: தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்வில் இருந்து வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை ஜூலை 31ஆம் தேதியான இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.25 அதிகரித்துள்ளது. அதேபோல், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.200 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை 30ஆம் தேதியான நேற்று, ஒரு கிராம் தங்கம் ரூ.75 உயர்ந்து விற்பனையானது. அதேபோல், ஒரு சவரன் தங்கம் ரூ.600 உயர்ந்து விற்பனையானது.

மேலும் படிக்க: பழைய வாகனங்களும் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்தலாமா? – மத்திய அரசு விளக்கம்

தங்கம் வெள்ளி விலை நிலவரம்:

அந்த வகையில், ஜூலை 31ஆம் தேதியான இன்று, ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.13,255-க்கும், ஒரு சவரன் ரூ.1,06,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 24 கேரட் தங்கம் ரூ.14,460-க்கும், ஒரு சவரன் ரூ.1,15,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரையில், கடந்த நான்கு நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,35,000-க்கும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: 18 காரட் தங்கத்திற்கு நகைக் கடன் கிடைக்குமா?.. தெரிந்துக்கொள்ளுங்கள்!

தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் பொறுத்தவரையில், தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரத்தில் நிலவும் சீரற்ற சூழலே இந்த விலை மாற்றங்களுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

தங்கம் விலை ஏற்ற இறக்கத்திற்கு என்ன காரணம்?

ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்து தங்கம் விலை சரிவைக் கண்டு வந்த நிலையில், வாடிக்கையாளர்கள் அதிகளவில் நகைகளை வாங்கத் தொடங்கினர். ஆனால், கடந்த சில நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவதால், தற்போது தங்கத்தை வாங்கலாமா அல்லது மீண்டும் விலை குறையுமா என்று காத்திருக்கும் நிலை வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

வல்லுநர்களின் கருத்துப்படி, உலகளவில் நிலவும் பல்வேறு பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருவதாகவும், வரவிருக்கும் நாட்களிலும் பெரிய அளவிலான விலை மாற்றம் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us