இன்று இரவு 12 மணிக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் கவலை வேண்டாம்.. உங்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு உள்ளது!
Income Tax Filing After 12 AM | வருமான வரி தாக்கல் செய்ய இன்று (ஜூலை 31, 2026) கடைசி தேதியாக உள்ளது. இந்த நிலையில், இன்று இரவு 12 மணிக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன ஆகும் என்பது குறித்து பார்க்கலாம்.
2026 – 2027 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் (Income Tax Filing) செய்ய இன்று (ஜூலை 31, 2026) தான் கடைசி தேதியாக உள்ளது. 2025 ஆம் ஆண்டை போல கடைசி தேதி நீட்டிக்கப்படும் என பல்வேறு எதிர்ப்பார்ப்புகள் எழுந்த நிலையில், தேதி நீட்டிக்கப்படவில்லை. இதன் காரணமாக, இன்று ஐடிஆர் – 1 மற்றும் ஐடிஆர் – 2 படிவங்களை பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்யும் நபர்கள் வருமான வரி தாக்கல் செய்து முடிக்க வேண்டும் என்பது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், இன்று இரவு 12 மணிக்கு மேல் வருமான வரி தாக்கல் செய்தால் என்ன நடக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடைசி நேரத்தில் வருமான வரி தாக்கல் செய்வதால் வரும் சிக்கல்கள்
வருமான வரி தாக்கல் செய்ய இன்று தான் கடைசி நாள் என்பதால் பலரும் மிகவும் அவசர அவசரமாக வருமான வரி தாக்கல் செய்வர். அவ்வாறு ஒரே நேரத்தில் பலர் வருமான வரி தாக்கல் செய்ய முயற்சி செய்யும்போது, இணையதளம் முடங்கிப்போவதற்கு வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக பலராலும் உரிய நேரத்தில் வருமான வரியை தாக்கல் செய்ய முடியாமல் போகலாம். இவ்வாறு கடைசி நேரத்தில் ஏற்படும் சிக்கல்களால் வருமான வரி தாக்கல் செய்ய முடியாமல் போகும் நபர்களுக்காக ஒரு சிறப்பு அம்சத்தையும் வருமான வரித்துறை வழங்குகிறது.
இதையும் படிங்க : Gold : 18 காரட் தங்கத்திற்கு நகைக் கடன் கிடைக்குமா?.. தெரிந்துக்கொள்ளுங்கள்!




12 மணியை தாண்டிவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
இந்தியாவில் இதுவரை 5 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று கடைசி நாள் என்பதால் லட்சக்கணக்கானவர்கள் கடைசி நேரத்தில் வருமான வரி தாக்கல் செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இன்று இரவு 12 மணிக்குள் வருமான வரி தாக்கல் செய்ய தவறும் நபர்கள், தாமதமான வரி தாக்கல் (Belated Return) முறையை பயன்படுத்தி வருமான வரியை தாக்கல் செய்யலாம்.
இதையும் படிங்க : இன்னும் ஒரு நாள் தான் இருக்கு.. ஜூலை 31-க்குள் இதை செய்யவில்லை என்றால் இலவச அரிசி கிடைக்காது!
இந்த முறையை பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்தால் அதற்கு அபராதம் விதிக்கப்படும். அதாவது, உங்களது ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மேல் இருந்தால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். இதுவே ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.