AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தள்ளாடும் தங்கம் விலை.. 4100 அமெரிக்கா டாலர்களை தாண்டாமல் இருப்பது ஏன்?

Gold Price Struggles Below 4100 America Dollars | தங்கம் விலை நாளுக்கு நாள் தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இருப்பினும் தங்கம் விலை 4100 அமெரிக்க டாலர்களை தாண்டாமலே உள்ளது. அதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தள்ளாடும் தங்கம் விலை.. 4100 அமெரிக்கா டாலர்களை தாண்டாமல் இருப்பது ஏன்?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 31 Jul 2026 13:43 PM IST

கடந்த சில நாட்களாக தங்கம் விலை (Gold Price) மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. தங்கம் விலை என்னதான் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தாலும், குறிப்பிட்ட அளவுக்கு மேல் தாண்டாமல் உள்ளது. அதாவது, தங்கம் விலை 4,100 அமெரிக்கா டலர்களுக்கு மேல் தாண்ட முடியாமல் உள்ளது. இவ்வாறு தங்கம் ஒரு குறிப்பிட்ட அளவுக்குள்ளேயே இருப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்தி வரும் தங்கம் விலை

ஈரான் போர், புவிசார் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்தது உள்ளிட்டவற்றின் காரணமாக கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஆனால், தங்கம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் உயர்வை சந்திக்காமல் இருந்து வருகிறது.

இதையும் படிங்க : இன்னும் ஒரு நாள் தான் இருக்கு.. ஜூலை 31-க்குள் இதை செய்யவில்லை என்றால் இலவச அரிசி கிடைக்காது!

குறிப்பாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி, விகித உயர்வை தள்ளி வைத்த பின்பும், பணவீக்கம் குறித்த அச்சம் அதிகமாக உள்ளதன் காரணத்தால், செப்டம்பர் கூட்டத்தில் வட்டி விகிதம் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டதற்கு பின்பும் கூட தங்கம் விலை பெரிய அளவில் உயராமலே இருந்து வருகிறது.

தங்கத்தின் இந்த நிலைக்கு முக்கிய காரணம் இதுதான்?

தங்கத்தின் விலை இத்தகைய சூழலுக்கு தள்ளப்பட்டதற்கு முக்கிய காரணம், பெட் முடிவுகளுக்கு பிறகு டாலர் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது, ஈரான் போர் மீண்டும் சூடுபிடித்துள்ள காரணத்தால் வளைகுடா பகுதிகளில் தொடர்ந்து போர் அச்சம் நீடித்து வருகிறது. இதன் காரணமாக தான், தங்கம் விலை உயர்வை சந்திக்க முடியாமல் தவித்து வருகிறது.

இதையும் படிங்க : பழைய வாகனங்களும் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்தலாமா? – மத்திய அரசு விளக்கம்

இன்று ஸ்பாட் சந்தையில் ஒரு ட்ராய் அவுன்ஸ் தங்கம் விலை 0.69 சதவீதம் வரை சரிந்து 4075 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோலா இந்தியாவின் கமாடிட்டி சந்தையில், 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை 0.44 சதவீதம் வரை சரிந்து ரூ.1,42,601-க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தாலும், தங்கம் விலை 4,100 அமெரிக்க டாலர்களை தாண்டாமல் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us