AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆடு, மாடுகளுக்குத் தண்ணீரில் விஷம்?.. கொத்துக் கொத்தாகப் பலி.. கோவையில் அதிர்ச்சி!!

கோவை சொக்கம்புதூர் பகுதியில் பிளாஸ்டிக் டிரம்மில் இருந்த தண்ணீரைக் குடித்த 3 மாடுகள் மற்றும் 11 ஆடுகள் ஒரே மணி நேரத்தில் மர்மமான முறையில் சுருண்டு விழுந்து உயிரிழந்தன. நச்சுத் தன்மை கலக்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆடு, மாடுகளுக்குத் தண்ணீரில் விஷம்?.. கொத்துக் கொத்தாகப் பலி.. கோவையில் அதிர்ச்சி!!
ஆடு
Sekaran S
Sekaran S | Published: 31 Jul 2026 14:25 PM IST

கோவை, ஜூலை 31: கோவை தெலுங்குபாளையம் அருகே பிளாஸ்டிக் டிரம்மில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரைக் குடித்த ஒரே மணி நேரத்திற்குள் 3 மாடுகள் மற்றும் 11 ஆடுகள் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: முந்தைய திமுக அரசின் ‘தாயுமானவர்’ திட்டம் பெயரை மாற்றிய தவெக அரசு!!

கொத்துக் கொத்தாகச் செத்து மடிந்த அவலம்:

கோவை, தெலுங்குப்பாளையம் அடுத்துள்ள சொக்கம்புதூர் மாசாணியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் பிரபா – ராமாவதி. இவர் அப்பகுதியில் சொந்தமாக ஆடு மற்றும் மாடுகளை வளர்த்துத் தனது வாழ்வாதாரத்தைக் கொண்டு செலுத்தி வருகிறார். கடந்த 28-ஆம் தேதி, இவருக்குச் சொந்தமான 3 மாடுகள் மற்றும் 11 ஆடுகள் மேய்ச்சலின் போது அங்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் டிரம் ஒன்றில் இருந்த தண்ணீரைக் குடித்துள்ளன. தண்ணீரைக் குடித்த சிறிது நேரத்திலேயே, விலங்குகள் அனைத்தும் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து அலறத் தொடங்கின. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர் காப்பாற்ற முயல்வதற்குள், ஒரே மணி நேரத்திற்குள் 14 கால்நடைகளும் பரிதாபமாக உயிரிழந்தன.

விலங்குகள் வதைத் தடுப்பு அதிகாரி நேரில் ஆய்வு:

கால்நடைகள் கொத்துக் கொத்தாகச் செத்து மடிந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரபா – ராமாவதி மற்றும் அப்பகுதி மக்கள், உடனடியாகக் காவல் துறைக்கும் விலங்குகள் நல அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவை மாவட்ட விலங்குகள் வதைத்தடுப்புச் சங்க அதிகாரி பாலகிருஷ்ணன், உயிரிழந்த கால்நடைகளையும், அவை தண்ணீர் குடித்த பிளாஸ்டிக் டிரம்மையும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

விஷம் கலக்கப்பட்டதா? — தீவிர விசாரணை:

விலங்குகள் குடித்த தண்ணீரில் மர்ம நபர்கள் யாரேனும் நஞ்சைக் கலந்து சதிச் செயலில் ஈடுபட்டனரா? அல்லது வேறு ஏதேனும் இரசாயனப் பொருட்களின் நச்சுத்தன்மை காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டதா? என்ற பல கோணங்களில் காவல்துறையினரும் அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த விலங்குகளின் உடல்களிலிருந்து மாதிரிகள் மற்றும் டிரம்மில் இருந்த தண்ணீர் ஆகியவை சேகரிக்கப்பட்டு, தடயவியல் மற்றும் வேதியியல் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வக அறிக்கை வந்த பிறகே உண்மையான காரணம் தெரியவரும் எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: “முதலில் மின்வெட்டு.. இப்போது மின்கட்டண உயர்வு!”.. தவெக ஆட்சியில் குளறுபடிகள்.. மு.க.ஸ்டாலின் சாடல்!!

வாழ்வாதாரமாக இருந்த 14 கால்நடைகள் ஒரே நேரத்தில் மர்மமான முறையில் பலியான சம்பவம், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும் சோக அலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Follow Us