வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைவு.. எவ்வளவு தெரியுமா?
Commercial Gas Cylinder Price Reduced By 200 Rupees | சென்னையில் இன்று வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய வணிக மற்றும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களின் விலை நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஆகஸ்ட் 01 : சென்னையில் இன்று (ஆகஸ்ட் 01, 2026) 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை (Commercial Gas Cylinder Price) குறைந்துள்ளது. முன்னதாக ரூ.3,106-க்கு விற்பனை செய்யப்பட்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் தற்போது ரூ.200 விலை குறைந்துள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில், எந்த வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில், இன்றைய கேஸ் சிலிண்டர் விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடும் உச்சத்திற்கு சென்ற கேஸ் சிலிண்டர் விலை
மேற்கு ஆசியா போர் (West Asia War) காரணமாக இந்தியா உள்ளிட்ட சில உலக நாடுகள் மிக கடுமையான கேஸ் சிலிண்டர் விலை உயர்வை சந்தித்தன. காரணம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான், ஹோர்முஸ் நீரிணையை மூடியது.
இதையும் படிங்க : இன்று இரவு 12 மணிக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் கவலை வேண்டாம்.. உங்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு உள்ளது!
இதனால், உலக நாடுகளின் சரக்கு கப்பல் போக்குவரத்து மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன் விளைவாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மிக கடுமையான விலை உயர்வை சந்தித்தது மட்டுமன்றி, பற்றாக்குறையும் ஏற்பட்டது. இந்த நிலையில் தான், இந்தியாவில் வணிக மற்றும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களுக்கான விலைகள் கடும் உயர்வை சந்தித்தன.
இன்றைய கேஸ் சிலிண்டர் விலை நிலவரம்
ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றி அமைக்கும். இதன் காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலைகளில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று (ஆகஸ்ட் 01, 2026) வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர், விலை குறைந்துள்ளது. அதாவது ரூ.3,106-ல் இருந்து ரூ.200 விலை குறைந்து ரூ.2,906-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : 2026-27 வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன?
வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை
14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.957.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளது உணவக உரிமையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.