தாம்பரம் – தூத்துக்குடி கோடைக்கால சிறப்பு ரயில்.. மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!
Southern Railway Extended Summer Special Train | சென்னை தாம்பரம் - தூத்துக்குடி இடையே தெற்கு ரயில்வே கோடைக்கால சிறப்பு ரயிலை இயக்கி வருகிறது. இந்த நிலையில், மேலும் ஒரு மாதத்திற்கு அந்த ரயில் சேவையை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தூத்துக்குடி, ஆகஸ்ட் 01 : தூத்துக்குடி – சென்னை தாம்பரம் (Tuticorin – Chennai Tambaram) இடையே கோடைக்கால சிறப்பு ரயிலை (Summer Special Train) மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்க உள்ளதாக தெற்கு ரயில்வே (Southern Railway) அறிவித்துள்ளது. கோடைக்காலத்தை முன்னிட்டு இயக்கப்பட்ட இந்த ரயில், ஜூலை மாதம் வரை பயன்பாட்டில் இருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு மாத காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோடைக்கால ரயில் சேவை நீட்டிப்பு குறித்து தெற்கு ரயில்வே கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கோடைக்கால சிறப்பு ரயிலை இயக்கும் தெற்கு ரயில்வே
கோடை விடுமுறையில் பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், தெற்கு ரயில்வே சென்னை தாம்பரம் – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயிலை இயக்கி வருகிறது. இந்த ரயில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு சென்னைக்கும், செவ்வாய்க்கிழமை சென்னை தாம்பரத்தில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு தூத்துக்குடிக்கும் சென்று சேறும்.
இதையும் படிங்க : பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு.. எப்படி தெரிந்துகொள்வது?




இந்த ரயில் மேலூர், தூத்துக்குடி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல், திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாபுலியூர், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் ஆகிய ஊர்களில் நின்று பயணம் செய்வதால் இந்த ஊர்களை சேர்ந்த பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
மேலும் ஒரு மாத காலம் ரயில் சேவை நீட்டிப்பு
இந்த ரயில் சேவையை மேலும் ஒரு மாத காலம் நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 03, 10, 17, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் இருந்து சென்னை தாம்பரத்துக்கும், ஆகஸ்ட் 04, 11, 18, 25 மற்றும் செப்டம்பர் 01 ஆகிட தேதிகளில் சென்னை தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க : டாஸ்மாக் முறைகேடு வழக்கு… கரூரை சேர்ந்த இருவர் கைது.. லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி!
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவும் தற்போது நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.