AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆகஸ்டில் பிறந்தவரா நீங்கள்? உங்களிடம் உள்ள பிரமிக்க வைக்கும் குணங்கள்!

ஒருவரது பிறந்த மாதம் அவர்களின் முழுமையான வாழ்க்கையைத் தீர்மானிக்காவிட்டாலும், குறிப்பிட்ட மாதத்தில் பிறப்பவர்களுக்குச் சில பொதுவான ஆளுமை பண்புகளும் இயல்புகளும் அமைவதாக பல்வேறு உளவியல் மற்றும் ஜோதிட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்களின் தனித்துவமான ஆற்றல்கள், அதிர்ஷ்டக் காரணிகள், தொழில் வாய்ப்புகள் மற்றும் அவர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து காணலாம்.

ஆகஸ்டில் பிறந்தவரா நீங்கள்? உங்களிடம் உள்ள பிரமிக்க வைக்கும் குணங்கள்!
Birth MonthImage Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 01 Aug 2026 06:01 AM IST

ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த நபர்கள் இயல்பாகவே கம்பீரமான தோற்றத்தையும் பிறரை வழிநடத்தும் ஆற்றலையும் கொண்டிருப்பார்கள். குடும்பம், அலுவலகம் அல்லது நண்பர்கள் வட்டம் என எதுவாக இருந்தாலும், இவர்களது கருத்துகளுக்குத் தனி முக்கியத்துவமும் மதிப்பும் கிடைக்கும். சுய நம்பிக்கையுடன் எந்தவொரு கடினமான முடிவையும் எடுக்கும் வல்லமை பெற்ற இவர்கள், தங்களுக்கு அளிக்கப்படும் பொறுப்புகளைச் செவ்வனே செய்து முடிக்கும் பண்பு கொண்டவர்கள்.

பெருந்தன்மையான குணமும் மரியாதையும்

மற்றவர்களுக்கு உதவி செய்வதில் இவர்கள் எப்போதும் தயக்கம் காட்டுவதில்லை. தங்களைச் சார்ந்தவர்களுக்காகவும் நண்பர்களுக்காகவும் எதையும் செய்யத் துணியும் பெருந்தன்மை இவர்களிடம் காணப்படும். அதேவேளையில், தான் பிறருக்கு அளிக்கும் அன்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் இணையான மரியாதையையும் கண்ணியத்தையும் மற்றவர்களிடம் இருந்து இவர்கள் எதிர்பார்ப்பார்கள்; அது தவறும்போது மனவேதனை அடைவார்கள்.

ஒளிவுமறைவற்ற நேர்மையான பேச்சு

மனதில் தோன்றிய விஷயங்களை ஒளிவுமறைவின்றி நேரடியாகப் பேசும் இயல்பு ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்களுக்கு உண்டு. இத்தகைய வெளிப்படைத்தன்மையால் சிலர் இவர்களைக் கடுமையானவர்கள் எனத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடும். ஆனால், யாரையும் காயப்படுத்துவது இவர்களின் நோக்கமல்ல; எந்தச் சூழ்நிலையிலும் உண்மையை மட்டுமே உரக்கப் பேசுவது இவர்களின் கொள்கையாக இருக்கும்.

சிறந்த நிதி மேலாண்மைத் திறன்

பொருளாதார ரீதியாக முன்னேறுவதில் இவர்களுக்கு எப்போதும் தனி கவனம் இருக்கும். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தி, நீண்டகால முதலீடுகள், சேமிப்பு திட்டங்கள் மற்றும் சொத்துக்கள் உருவாக்குவதில் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுவார்கள். இதனால் நிதி விஷயங்களில் திறம்படத் திட்டமிட்டுப் பாதுகாப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொள்வார்கள்.

காதல் மற்றும் உறவுகளில் உண்மையான அர்ப்பணிப்பு

உறவுகளைப் பொறுத்தவரை, ஒருவரை நேசிக்கத் தொடங்கிவிட்டால் முழுமையான நம்பிக்கையுடனும் விசுவாசத்துடனும் இருப்பார்கள். துரோகத்தையோ ஏமாற்றத்தையோ இவர்களால் எளிதில் சகித்துக் கொள்ள முடியாது. எனவே, தங்களின் இணை மற்றும் நண்பர்களிடம் இருந்து நேர்மையை மட்டுமே இவர்கள் முதன்மையாக எதிர்பார்ப்பார்கள்.

தொழில் மற்றும் இலக்குகளை அடையும் முனைப்பு

தம் தொழில் அல்லது வேலைத் துறையில் உச்சத்தை அடைய வேண்டும் என்ற தீவிர லட்சியம் இவர்களிடம் எப்போதும் குடியிருக்கும். நிர்வாகத்துறை, தொழில்முனைவு, அரசாங்கப் பணிகள், கல்வித்துறை, வர்த்தகம் மற்றும் ஊடகம் போன்ற பல்வேறு துறைகளில் இவர்கள் தங்களின் தனி முத்திரையைப் பதிக்கும் ஆற்றல் படைத்தவர்களாகத் திகழ்வர்.

பொறுப்புத்துறப்பு: இந்தக்கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி எழுதப்பட்டது. இது அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆனது அல்ல.

Follow Us