Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Constipation: நார்ச்சத்து மட்டுமல்ல! இதனாலும் மலச்சிக்கல் ஏற்படலாம்..!

Vitamin Deficiency: சில வைட்டமின்களின் (Vitamins) குறைபாடும் மலச்சிக்கல் பிரச்சனையை உண்டாக்கும். இந்த வைட்டமின்கள்தான் குடல்களை நகர்த்தி செரிமானத்தை பராமரிக்கின்றன. மேலும், மனித கழிவுகளை மென்மையாக வைத்திருக்க உதவுகின்றன. அதன்படி, இந்த வைட்டமின்கள் குறைபாடு இருக்கும்போது, குடல்களின் இயக்கம் குறைந்து மலச்சிக்கல் தொடங்குகிறது.

Constipation: நார்ச்சத்து மட்டுமல்ல! இதனாலும் மலச்சிக்கல் ஏற்படலாம்..!
மலச்சிக்கல்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 27 Nov 2025 18:54 PM IST

மலச்சிக்கல் என்பது கிட்டத்தட்ட பலரும் எதிர்கொள்ளும் பிரச்சனையாகும். இதற்கு வீக்கம், கனத்தன்மை, அசௌகரியம் மற்றும் காலையில் வயிற்றை காலி செய்வதில் சிரமம் ஆகியவை அதன் பொதுவான அறிகுறிகளாகும். மலச்சிக்கல் (Constipation) குறைந்த நார்ச்சத்து, குறைந்த நீர் உட்கொள்ளல் அல்லது நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் மட்டுமே ஏற்படுகிறது என்று பலரும் நினைக்கிறார்கள். இது ஒருபுறம் உண்மை என்றாலும், சில வைட்டமின்களின் (Vitamins) குறைபாடும் மலச்சிக்கல் பிரச்சனையை உண்டாக்கும். இந்த வைட்டமின்கள்தான் குடல்களை நகர்த்தி செரிமானத்தை பராமரிக்கின்றன. மேலும், மனித கழிவுகளை மென்மையாக வைத்திருக்க உதவுகின்றன. அதன்படி, இந்த வைட்டமின்கள் குறைபாடு இருக்கும்போது, குடல்களின் இயக்கம் குறைந்து மலச்சிக்கல் தொடங்குகிறது.

ALSO READ: மழைக்காலத்தில் குடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்கவழக்கங்கள்.. ஏன் இதை தவிர்க்க வேண்டும்?

வைட்டமின் பி1 (தியாமின்) குறைபாடு:

செரிமானம் மற்றும் ஆற்றல் உற்பத்திக்கு வைட்டமின் பி1 அவசியம். இது குறைவாக இருக்கும்போது, வயிறு உணவை மெதுவாக ஜீரணிக்கிறது. அதன்படி, மலச்சிக்கல் மற்றும் வயிற்று கனத்தன்மைக்கு வழிவகுக்கும். இந்த தியாமின் குறைபாட்டை சரிசெய்வது செரிமானம் மற்றும் மலச்சிக்கல் இரண்டையும் மேம்படுத்தலாம்.

வைட்டமின் டி குறைபாடு:

வைட்டமின் டி எலும்புகளுக்கு மட்டுமல்ல, குடல் தசைகள் சரியாக செயல்படவும் உதவுகிறது. இதன் குறைபாடு குடல் இயக்கத்தை மெதுவாக்குகிறது. இதனால், மனித கழிவுகள் கடினமாகி குறைவாக வெளியேற்றப்படுகின்றன. குறைந்த வைட்டமின் டி அளவு உள்ளவர்கள் பெரும்பாலும் மலச்சிக்கலால் பாதிக்கப்படுகின்றனர். இதை சரிசெய்ய காலை சூரிய ஒளி, சப்ளிமெண்ட்ஸ், பால் அல்லது தானியங்களை எடுத்து கொள்ளலாம்.

வைட்டமின் பி12 குறைபாடு:

வைட்டமின் பி12 குடலில் உள்ள நரம்புகளை ஆரோக்கியமாக வைக்கும். இது குறைவாக இருக்கும்போது, குடல் இயக்கம் குறைந்து மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். பி12 குறைபாடு உள்ளவர்கள் பெரும்பாலும் சோர்வாகவும், பலவீனமாகவும் தோன்றும். மீன், முட்டை, பால் எடுத்துக்கொள்ளலாம்.

வைட்டமின் சி குறைபாடு:

வைட்டமின் சி மனித கழிவுகள் தண்ணீரை ஈர்க்க உதவுகிறது. இது மென்மையாகவும், எளிதாகவும் வெளியேற உதவி செய்யும். இது குறைபாடு மனித கழிவுகளில் வறட்சியை ஏற்படுத்தி மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். இதை சரிசெய்ய எலுமிச்சை, ஆரஞ்சு, கொய்யா, ஸ்ட்ராபெர்ரி மற்றும் குடை மிளகாய் போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளலாம்.

ALSO READ: சர்க்கரை நோயாளிகள் உருளைக்கிழங்கு சாப்பிடுவது சரியா தவறா? மருத்துவர்கள் கூறுவது என்ன?

மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு என்ன..?

நீங்கள் நீண்ட நாட்களாக மலச்சிக்கலால் அவதிப்பட்டால், நார்ச்சத்து மற்றும் தண்ணீர் மட்டுமல்ல, உங்கள் வைட்டமின் அளவையும் சரிபார்க்க வேண்டியது அவசியம். சரியான உணவுமுறை மற்றும் தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனைப்படி கூடுதல் உணவுகள் உங்கள் குடல்களை மீட்டெடுக்க உதவும்.