Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Health Tips: இதயத்திற்கு இந்த 5 உணவுகள் எதிரிகள்.. எச்சரிக்கும் மருத்துவர் பிள்ளை!

Heart Health: வறுத்த, பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்திற்காக டுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் அல்லது நெய் போன்ற மாற்றுகளை தேர்ந்தெடுப்பது மிகவும் நன்மை பயக்கும். மது அருந்துவதை தவிர்ப்பது ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க ஒரு நல்ல வழியாகும்.

Health Tips: இதயத்திற்கு இந்த 5 உணவுகள் எதிரிகள்.. எச்சரிக்கும் மருத்துவர் பிள்ளை!
இதயத்திற்கு ஆரோக்கியமற்ற உணவுகள்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 20 Jan 2026 19:39 PM IST

இதய நோய்களின் (Heart Disease) எண்ணிக்கை அதிகரித்து வருவதால், உங்கள் இதய ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். மருத்துவரை சந்திப்பது, உடற்பயிற்சி செய்வது மற்றும் மன அழுத்தத்தை குறைப்பதன் மூலம் நம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நாம் முயற்சி செய்கிறோம். இன்றைய நவீன வாழ்க்கையில் இதயம் தொடர்பான பிரச்சினைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன, இதற்கு முக்கிய காரணம் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் (Food Habits). உணவில் சரியான மாற்றங்களைச் செய்வது இதய நோய்களை பெருமளவில் தடுக்கும் என்று சுகாதார நிபுணர்கள் நம்புகின்றனர். இன்று, இதயத்தின் எதிரிகளாக மாறக்கூடிய மற்றும் உங்களை இதய நோயாளியாக மாற்றக்கூடிய சில உணவுகளை பற்றி மருத்துவர் பிள்ளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ALSO READ: நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பது எப்படி? மருத்துவர் அருண் குமார் டிப்ஸ்!

அதிகப்படியான எண்ணெய் உணவுகள்:


இன்று கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் பேக்கேஸ் செய்யப்பட்ட எண்ணெய்களை சமைக்க பயன்படுத்துகிறோம். இந்த எண்ணெய்களில் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. சிறிய அளவிலான ஒமேகா-6 உடலுக்கு அவசியமானதாக இருந்தாலும், இன்றைய உணவுகளில் இது அதிகமாகவும், மிகக் குறைவாகவும் ஒமேகா-3 உள்ளது. இந்த ஏற்றத்தாழ்வு உடலில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது, இது தமனிகளை சேதப்படுத்துவதன் மூலமும், கொழுப்பை அதிகரிப்பதன் மூலமும், உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துவதன் மூலமும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. அதேநேரத்தில், வறுத்த, பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்திற்காக டுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் அல்லது நெய் போன்ற மாற்றுகளை தேர்ந்தெடுப்பது மிகவும் நன்மை பயக்கும்.

உப்பு மற்றும் இனிப்பு சார்ந்த உணவுகள்:

உப்பு மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளையும் தவிர்க்க வேண்டும். ஊறுகாய், சிப்ஸ் மற்றும் ரெடிமேட் நூடுல்ஸ் போன்ற உணவுகளில் அதிக அளவு சோடியம் ய்ள்ளது. அதிகப்படியான உப்பு சார்ந்த உணவுகள் இரத்த அழுத்தத்தை விரைவாக அதிகரிக்கும். இது பக்கவாதம் மற்றும் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும்.

கார்பனைட் பானங்கள்:

குளிர் பானங்கள், பாக்கெட் ஜூஸ்கள் மற்றும் இனிப்புகளில் மறைந்திருக்கும் சர்க்கரை இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும். இந்த உணவுகள் உடலில் ட்ரைகிளிசரைடுகளின் அளவை அதிகரித்து சர்க்கரை மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்.

ALSO READ: சர்க்கரை நோயாளிகள் எந்த பழங்களை சாப்பிடக்கூடாது..? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்!

மது அருந்துதல்:

மது அருந்துவதை தவிர்ப்பது ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க ஒரு நல்ல வழியாகும். தொடர்ந்து அதிகமாக மது அருந்துவது உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கும், இவை அனைத்தும் இதய நோய்க்கான ஆபத்து காரணிகளாகும்.