Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Health Tips: உள்ளங்கால்களில் தொடர்ந்து எரிச்சலா..? காரணம் என்ன? விளக்கம் மருத்துவர் ராஜா..!

Burning Feet: பாதங்களில் எரிச்சல் ஏற்படுவதற்கு எரியும் கால் நோய்க்குறி (BFS) என்று பெயர். இது பெரும்பாலும் உள்ளங்கால்களுக்கு கீழே எரிச்சல், கனமான, உணர்வின்மை அல்லது குத்துதல் போன்ற உணர்வை தரும். இந்த பிரச்சனையை எதிர்கொள்பவர்களுக்கு தங்கள் கால்களில் தொடர்ந்து எரிச்சல் மற்றும் வலியை தரும்.

Health Tips: உள்ளங்கால்களில் தொடர்ந்து எரிச்சலா..? காரணம் என்ன? விளக்கம் மருத்துவர் ராஜா..!
பாதங்களில் வலிImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 14 Jan 2026 20:21 PM IST

குளிர்காலம் (Winter) தொடங்கியவுடன் பல வகையான பிரச்சனைகள் ஆரோக்கியத்தை பாதிக்க செய்கின்றன. இதுபோன்ற பருவ மாற்றத்தின்போது உள்ளங்கால்களில் எரியும் உணர்வு, நீரிழப்பு, வெப்பத் தடிப்பு, வயிற்றுப்போக்கு ஏற்படும். ஆனால், உங்கள் உள்ளங்கால்களில் எரிச்சல் உணர்வு தொடர்ந்து இருந்தால், அது இரவில் மட்டும் அதிகமாக ஏற்பட்டால், அதை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. ஆம், இந்த பிரச்சனை வேறு பல நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம். அதன்படி, கால்களில் ஏன் எரிச்சல் (Burning Feet) ஏற்படுகிறது..? அதற்கான காரணம் என்ன..? உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

பாதங்களில் எரிச்சல் ஏன் ஏற்படுகிறது..?

பாதங்களில் எரிச்சல் ஏற்படுவதற்கு எரியும் கால் நோய்க்குறி (BFS) என்று பெயர். இது பெரும்பாலும் உள்ளங்கால்களுக்கு கீழே எரிச்சல், கனமான, உணர்வின்மை அல்லது குத்துதல் போன்ற உணர்வை தரும். இந்த பிரச்சனையை எதிர்கொள்பவர்களுக்கு தங்கள் கால்களில் தொடர்ந்து எரிச்சல் மற்றும் வலியை தரும். சில நேரங்களில் இந்த வலி கணுக்கால் மற்றும் முட்டிகால்கள் வரை பரவும். இந்த பிரச்சனையை பெரும்பாலும் வயதானவர்களே அதிகளவில் எதிர்கொண்டாலும், இரவில் இன்னும் மோசமாக இருக்கும்.

ALSO READ: பிறந்து 6 மாதமாகியும் குழந்தை தவழவில்லையா..? மருத்துவர் சுபாஷ் சூப்பர் டிப்ஸ்!

எரியும் கால் நோய்க்குறி ஏற்பட காரணம்..?

சர்க்கரை நோய் நரம்பியல்:

கால்களில் எரிச்சல் பெரும்பாலும் சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவருக்கு நரம்பு சேதத்தால் ஏற்படும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளங்கால்களில் எரியும் உணர்வு, வலி, கூச்ச உணர்வு, கை மற்றும் கால்களில் உணர்வின்மை போன்ற அறிகுறிகளை தரலாம்.

ஊட்டச்சத்து குறைபாடு:

வைட்டமின்கள் பி12,பி6 மற்றும் போலேட் குறைபாடு உள்ளங்காலில் எரியும் உணர்வை ஏற்படுத்தும். ஒருவரின் உடல் ஊட்டச்சத்துக்களை சரியாக உறிஞ்ச முடியாவிட்டால், நரம்பு பாதிப்பு அல்லது எரிச்சல் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.

மாதவிடாய்:

சில நேரங்களில் மாதவிடாய் காரணமாக ஹார்மோன் மாற்றங்களும் ஏற்படலாம். இது உடல் வெப்பநிலையை அதிகரித்து கால்களில் எரிச்சலை ஏற்படுத்தும்.

தொற்றுகள்:

பாதப்படை போன்ற பூஞ்சை தொற்றுகளும் உள்ளங்கால்களில் எரிச்சலை ஏற்படுத்தும். இந்த பிரச்சனை டைனியா பெடிஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

கர்ப்ப காலம்:

கர்ப்ப காலத்தில் புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ரிலாக்சின் ஹார்மோன்களின் அளவு அதிகரிக்கிறது. இது உடலில் வெப்பநிலையை அதிகரித்து, பாதங்களில் உள்ள இரத்த நாளங்களையும் பாதிக்கும். இதனால் உள்ளங்கால்களில் வெப்ப உணர்வு ஏற்படும்.

ALSO READ: சிக்கன் இதயத்தில் சாப்பிடலாமா? நன்மைகளை அடுக்கும் மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப்!

இந்த பிரச்சனையை சரிசெய்வது எப்படி..?

  • வைட்டமின் பி குறைபாட்டை போக்க, மருத்துவரை அணுகி சப்ளிமெண்ட்ஸ் எடுத்து கொள்ளலாம்.
  • பாதங்களை குளிர்ந்த நீரில் 15 நிமிடங்கள் மூழ்கடிப்பது பாதங்களில் ஏற்படும் எரியும் உணர்வை குறைக்கும்.
  • எரியும் உணர்வு தொடர்ந்து ஏற்பட்டால், உடனடியாக ஒரு மருத்துவரை அணுகி தேவையான சிகிச்சை பெறுவது முக்கியம்.