Health Tips: கீழே உட்கார்ந்தால் கால்கள் மரத்துப்போகிறதா? காரணத்தை சொல்லும் மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப்
Frozen legs: ஒரே இடத்தில் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பது கால்களில் இரத்த ஓட்டத்தை சீர்குலைத்து, விறைப்பு மற்றும் மூட்டு வலியை ஏற்படுத்துகிறது. உங்கள் கால்களை ஒரே நிலையில் வைத்திருப்பது அவற்றை வளைக்க கடினமாகவும், நடக்க கடினமாகவும், எழுந்து உட்கார கடினமாகவும், படிக்கட்டுகளில் ஏறுவது கூட கடினமாகவும் இருக்கும்.
ஒரே இடத்தில் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பது கால்களின் நிலையை கடுமையாக பாதிக்கிறது. இது மூட்டுகளில் வலியை (Joint Pain) ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், கால்களில் இரத்த ஓட்டத்தையும் பாதிக்கிறது. இதனால் சில நேரங்களில் கால்களில் மரத்து போக தொடங்கும். பலரும் கீழே உட்கார்ந்து சாப்பிடும்போது அடிக்கடி கால் மரத்து போகும் (Frozen Legs) பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் பாதிப்புக்கு பிறகு, பெரும்பாலானோர் வீட்டிலிருந்து ஒர்க் ப்ரம் ஹோம் வேலை செய்கிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் பெரும்பாலும் ஒரே இடத்தில் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பதால் பல்வேறு உடல் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. கால் பிரச்சனைகள் இவற்றில் ஒன்றாகும். இந்தநிலையில், மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப் கீழே உட்கார்ந்தால் ஏன் கால்கள் மரத்து போகிறது? அதனை எப்படி சரிசெய்வது..? உள்ளிட்ட குறிப்புகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.




கால்கள் ஏன் மரத்து போகிறது..?
View this post on Instagram
ஒரே இடத்தில் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பது கால்களில் இரத்த ஓட்டத்தை சீர்குலைத்து, விறைப்பு மற்றும் மூட்டு வலியை ஏற்படுத்துகிறது. உங்கள் கால்களை ஒரே நிலையில் வைத்திருப்பது அவற்றை வளைக்க கடினமாகவும், நடக்க கடினமாகவும், எழுந்து உட்கார கடினமாகவும், படிக்கட்டுகளில் ஏறுவது கூட கடினமாகவும் இருக்கும். அதிகப்படியான கூச்ச உணர்வை கொடுக்கும். கீழே உட்காரும்போதோ அல்லது ஒரே இடத்தில் இருக்கும்போதோ, உங்கள் கால்கள் மரத்து போனால் 10 நிமிடங்கள் எழுந்து நின்றால், நடந்தால் சரியாகும்.
சிலருக்கு இந்த பிரச்சனை தொடர்ந்து நீடித்தால், ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது கடுமையானதாக மாறும். அரை மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது கீழ் உடலுக்கு, குறிப்பாக கால்களுக்கு இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தும். இது இரத்த ஓட்டத்தில் இருந்து ஆக்ஸிஜன் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களைத் துண்டித்து, கால்கள் பலவீனமடையும் அபாயத்தை அதிகரிக்கும்.
ஒரே நிலையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதைத் தவிர்ப்பதே சிறந்த தீர்வாகும். மேலும், நீங்கள் அவ்வாறு செய்தால், இரத்த ஓட்டம் பாதிக்கப்படாமல் இருக்க உங்கள் கால் நிலைகளை மாற்றிக் கொண்டே இருங்கள். அப்படி இல்லையென்றால், கால்களை நகர்த்திக் கொண்டே இருங்கள். நீங்கள் இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், அதிலிருந்து விடுபட உதவும் சில எளிய கால் பயிற்சிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
கால் ஆட்டுதல்:
கால் ஆட்டுதல் என்பது ஒரு வகையான வார்ம்-அப் ஆகும். நேராக நின்று இரண்டு கைகளையும் உங்கள் இடுப்பில் வைக்கவும். பின்னர், ஒரு காலை ஊன்றி, மற்றொரு காலை மேலே தூக்கவும், இப்படி 6 முதல் 7 முறை செய்யவும். இதைச் செய்வது உங்கள் கால்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது உங்கள் கால் தசைகளில் இரத்த ஓட்டத்தை சீராக செய்ய உதவுகிறது.
சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நடைபயிற்சி:
நீங்கள் நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்தால், தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது சைக்கிள் ஓட்ட வேண்டும். கூடுதலாக, உங்கள் கால்களை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க தினமும் காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, கால்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.