Winter Health Tips: குளிர்காலத்தில் கைகள் மரத்து போகிறதா..? இது நரம்பு பிரச்சனையின் அறிகுறியா?
Winter Hands Feet Numbness: குளிர்காலத்தில் கைகள் மற்றும் கால்களில் உணர்வின்மை என்பது உடலின் ஒரு சாதாரண விஷயமாகும். குளிர்ந்த காலநிலையின்போது இதயம் மற்றும் மூளை போன்ற முக்கிய உறுப்புகளைப் பாதுகாக்க உடல் கைகள் மற்றும் கால்களுக்கு இரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது.
இந்தியாவில் பல இடங்களில் வெப்பநிலை தொடர்ந்து குறைந்து வருகிறது. பகல் நேரத்தில் வெயில் அடித்தாலும் கூட குளிரானது உடலை நடுங்க செய்கிறது. குளிர் காலநிலையால் பெரும்பாலான மக்கள் கைகள் மற்றும் கால்களில் கூச்ச உணர்வு மற்றும் உணர்வின்மை (Numb) பிரச்சனையை சந்திக்கிறார்கள். குளிர்காலத்தில் (Winter) காலை மற்றும் இரவு நேரங்களில் அல்லது கடுமையான குளிரின் போது இந்த பிரச்சனை அதிகளவில் தொல்லை கொடுக்க தொடங்குகிறது. பலர் இதை சாதாரண பிரச்சனை என்று நினைக்கும் வேளையில், மற்றவர்கள் இது நரம்பு பிரச்சனையின் ஆரம்ப அறிகுறியாக இருக்குமோ என்று பயப்படுக்கிறார்கள். இருப்பினும், இந்த பிரச்சனை எப்போதும் பொதுவானதல்ல. சில நேரங்களில் இது நரம்பு பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். இதைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.
ALSO READ: குளிர்காலத்தில் வாட்டி எடுக்கிறதா மூட்டு வலி..? ஏன் வருகிறது தெரியுமா..?
குளிர் காரணமாக கைகள் மற்றும் கால்களில் மரத்துப் போதல் ஏன்..? இது சாதாரணமானதா?
குளிர்காலத்தில் கைகள் மற்றும் கால்களில் உணர்வின்மை என்பது உடலின் ஒரு சாதாரண விஷயமாகும். குளிர்ந்த காலநிலையின்போது இதயம் மற்றும் மூளை போன்ற முக்கிய உறுப்புகளைப் பாதுகாக்க உடல் கைகள் மற்றும் கால்களுக்கு இரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது. இதனால்தான் கைகள், கை விரல்கள் மற்றும் கால்விரல்கள் கூச்சமாகவோ அல்லது மரத்துப்போதல் பிரச்சனையை சந்திக்கிறார்கள். இதை தவிர்க்க மக்கள் குளிர்காலத்தில் கைகள் மற்றும் கால்களை தீயின் முன்பு காமித்தல், கையுறைகளை அணிதல் மற்றும் சிறிது நேரம் ஓய்வு எடுத்தல் போன்றவற்றை மேற்கொள்கிறார்கள்.




இருப்பினும், இந்த உணர்வின்மை அடிக்கடி ஏற்பட்டாலோ அல்லது நீண்ட நேரம் நீடித்தாலோ நரம்பு பிரச்சனையின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். மரத்து போதலுடன் உங்களுக்கு எரிதல், வலி, பலவீனம், நடக்க சிரமம் அல்லது பொருட்களைப் பிடிப்பது போன்ற பிரச்சனைகளும் ஏற்பட்டால் நரம்பு பிரச்சனையைக் குறிக்கின்றன. அதன்படி வைட்டமின் பி12 குறைபாடு, சர்க்கரை நோய், நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்திருப்பது அல்லது நரம்பு மீது அழுத்தம் கொடுப்பது ஆகியவை இதற்குக் காரணமாக இருக்கலாம். இந்த அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
ALSO READ: உங்களுக்கு இந்த ஊட்டச்சத்து குறைபாடு இருக்கா? வெயில் காலத்தில் குளிர தொடங்கும்!
மரத்து போதல் பிரச்சனையை சரிசெய்ய என்ன செய்யலாம்?
- உங்கள் கைகளையும் கால்களையும் குளிரில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, ஏதாவது வேலைகள் அல்லது அடர்த்தி மிகுந்த கையுறை, சாக்ஸ்களை அணியலாம்.
- உங்கள் கைகளையும் கால்களையும் ஒரே நிலையில் வைத்திருக்கவோ அல்லது அதிக நேரம் ஒரே இடத்தில் வைப்பதையோ தடுக்கலாம்.
- உங்கள் கைகளையும் கால்களையும் வெதுவெதுப்பான நீரில் நனைக்கவும் .
- குளிர் காலத்தில் நீண்ட நேரம் வெளியே சுற்றுவதை தவிர்க்கலாம்.
- வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளலாம்.
- குளிர்காலத்தில் லேசான உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
இவை அனைத்தையும் செய்த பிறகு, இந்த பிரச்சனைகள் நீடித்தால், மருத்துவரை அணுகவும் .