Health Tips: சிக்கன் இதயத்தில் சாப்பிடலாமா? நன்மைகளை அடுக்கும் மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப்!
Chicken Heart Health Benefits: சிக்கனின் இதயத்தை (Chicken Heart) பெரும்பாலோனோர் சாப்பிடுவது கிடையாது. அதன்படி, பலரும் இதன் ஆரோக்கியத்தை அறிவது கிடையாது. அந்தவகையில், சிக்கனின் இதயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அசைவ பிரியர்களுக்கு சிக்கன் மிகவும் பிடித்தமான உணவாகும். ஒருபுறம், இது உடலுக்கு புரதத்தின் சிறந்த மூலமாக பார்க்கப்படுகிறது. மறுபுறம், இது ஒரு ஆரோக்கியமான உணவு மற்றும் நமது உடல் வெப்பநிலையை நன்கு பராமரிக்கவும் உதவி செய்யும். அனைத்து வயதினரும் சாப்பிடக்கூடிய சிக்கனை பெரும்பாலும் இறைச்சியாகதான் மக்கள் எடுத்து கொள்கிறார்கள். ஆனால், சிக்கனின் இதயத்தை (Chicken Heart) பெரும்பாலோனோர் சாப்பிடுவது கிடையாது. அதன்படி, பலரும் இதன் ஆரோக்கியத்தை அறிவது கிடையாது. அந்தவகையில், சிக்கனின் இதயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சிக்கன் இதயங்கள் கடைகளில் மிகவும் மலிவானவை. நன்றாக சமைத்தால் இதன் சுவை சூப்பராக இருக்கும். சிக்கன் இதயத்தில் புரதம், இரும்புச்சத்து மற்றும் பல்வேறு வைட்டமின்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன.




ALSO READ: கீழே உட்கார்ந்தால் கால்கள் மரத்துப்போகிறதா? காரணத்தை சொல்லும் மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப்
சிக்கன் இதயத்தில் உள்ள ஊட்டச்சத்துகள்:
- கலோரிகள்: 268
- கார்போஹைட்ரேட்டுகள்: 3.4 கிராம்
- கொழுப்பு: 11.5 கிராம்
- புரதம்: 38.3 கிராம்
- நார்ச்சத்து: 0 கிராம்
- சர்க்கரை: 0 கிராம்
- கொழுப்பு: 351மி.கி.
வைட்டமின்கள்
- வைட்டமின் ஏ: 1% தினசரி அளவு
- வைட்டமின் பி3: 25% தினசரி அளவு
- வைட்டமின் B6: 36% தினசரி அளவு
- வைட்டமின் பி12: 440% தினசரி அளவு
- வைட்டமின் சி: 3% தினசரி அளவு
கனிமங்கள்
- கால்சியம்: 3% தினசரி அளவு
- இரும்பு: 164% தினசரி அளவு
- மெக்னீசியம்: 7% தினசரி அளவு
- பாஸ்பரஸ்: 23% தினசரி அளவு
- பொட்டாசியம்: 41% தினசரி அளவு
- துத்தநாகம்: 96% தினசரி அளவு
- தாமிரம்: 81% தினசரி அளவு
- மாங்கனீசு: 7% தினசரி அளவு
- செலினியம்: 21% தினசரி அளவு
ALSO READ: பிறந்து 6 மாதமாகியும் குழந்தை தவழவில்லையா..? மருத்துவர் சுபாஷ் சூப்பர் டிப்ஸ்!
ஆரோக்கிய நன்மைகள்:
View this post on Instagram
வைட்டமின் பி12 நிறைந்தது:
ஒரு முறை சிக்கன் இதயத்தை சாப்பிடும்போது உங்கள் தினசரி மதிப்பில் சுமார் 440% வழங்குகிறது. இது இரத்த சிவப்பணு உருவாக்கி, நரம்பியல் செயல்பாட்டை ஆதரிக்கிறது.
இரும்புச்சத்து அதிகம்:
ஒரு கப் சிக்கன் இதயத்தில் தினசரி மதிப்பில் 164% உடலில் ஆக்ஸிஜன் போக்குவரத்திற்கு வழிவகுத்து, இரும்புச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
நியாசினின் (வைட்டமின் பி3) நல்ல ஆதாரம்:
ஆற்றல் வளர்சிதை மாற்றம் மற்றும் டிஎன்ஏ பழுதுபார்ப்பில் நியாசின் முக்கிய பங்கு வகிக்கிறது.
பாஸ்பரஸ்:
சிக்கன் இதயத்தில் உள்ள பாஸ்பரஸ் எலும்பு ஆரோக்கியத்திற்கும் ஆற்றல் உற்பத்திக்கும் இன்றியமையாதது.
புரதம் நிறைந்தது:
20 கிராம் சிக்கன் இதயம் சாப்பிடுவது தசை ஆரோக்கியத்திற்கும் ஒட்டுமொத்த உடல் செயல்பாடுகளுக்கும் பங்களிக்கின்றன.
இதய ஆரோக்கியம்:
சிக்கன் இதயத்தில் கொழுப்பு குறைவாக இருப்பதால், அவை இதயத்திற்கு ஏற்ற உணவாக கருதப்படுகிறது.