Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Instagram : இன்ஸ்டாவில் இருந்து உங்களுக்கு பாஸ்வேர்டு மாற்றம் குறித்து மெயில் வந்ததா?..உண்மை இதுதான்!

Password Change Mail From Instagram | உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், பயனர்களுக்கு பாஸ்வேர்டு மாற்றம் குறித்து மெயில் வந்தது குறித்து இன்ஸ்டாகிராம் நிறுவனம் எக்ஸ் பக்கம் மூலம் விளக்கமளித்துள்ளது.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 Jan 2026 00:27 AM IST
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் பிரதான செயலியாக மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலி உள்ளது. இந்த செயலியை ஏராளமான பொதுமக்கள் தங்களது பொழுதுபோக்கு மற்றும் தகவல் பரிமாற்ற சேவைக்காக பயன்படுத்துகின்றனர். 

1 / 5
இவ்வாறு பலரும் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தும் நிலையில், அதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது இன்ஸ்டாகிராம் செயலியில் இருந்து பயனர்களுக்கு பாஸ்வேர்டு ரீசெட் செய்யக்கோரி மெயில் அனுப்பப்பட்டுள்ளது குறித்து கூறியுள்ளது. 

2 / 5
பாஸ்வேர்டு ரீசெட் மெயில் குறித்து விளக்கமளித்துள்ள மெட்டா நிறுவனம், சமீப காலமாகவே தங்களது பயனர்களுக்கு இத்தகைய மெயில் அனுப்பப்பட்டு வருவதாகவும், அது இன்ஸ்டாகிராம் செயலியில் ஏற்பட்டுள்ள ஒரு சிக்கல் என்றும் இன்ஸ்டாகிராம் கூறியுள்ளது. இந்த மெயில் குறித்து பயனர்கள் கலக்கமடைந்து வந்த நிலையில், அதனையும் இன்ஸ்டாகிராம் தெளிவு படுத்தியுள்ளது. 

3 / 5
அதாவது இந்த மெயில் இன்ஸ்டாகிராம் செயலியில் ஏற்பட்டுள்ள சிறிய சிக்கல் என்றும், அது குறித்து பயனர்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது. பயனர்களுக்கு அவர்கள் பாஸ்வேர்டு ரீசெட் செய்யாமலே மெயில் அனுப்பப்படும் இந்த சிக்கல் சரிசெய்யப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. 

4 / 5
இந்த சிக்கல் விரைவில் சரிசெய்யப்படும் என்றும், அது குறித்து பயனர்கள் கவலைக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்தகைய மெயில்கள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் ஏராளமான மோசடி சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், மெட்டா அது குறித்து விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

5 / 5