AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் Vs மூத்த குடிமக்கள் எஃப்டி.. இரண்டில் எது சிறந்தது?

Senior Citizen Saving Scheme Vs Senior Citizen FD | மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மற்றும் மூத்த குடிமக்கள் எஃப்டி திட்டம் இரண்டும் மூத்த குடிமக்களுக்கான முக்கிய முதலீட்டு திட்டங்களாக உள்ளன. இவை இரண்டில் எது சிறந்தது என்பது குறித்து பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Feb 2026 21:43 PM IST
மனிதர்கள் தங்களது வாழ்நாளில் 40 ஆண்டுகள் கடினப்பட்டு உழைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அவ்வாறு தங்களது வாழ்நாள் முழுவது கடினப்பட்டு உழைத்த பணத்தை பாதுகாப்பாக வைக்க வேண்டும், அதே சமயம் அதில் இருந்து நல்ல வருமானத்தை பெற வேண்டும் என்பதும் பலரது எண்ணமாக உள்ளது. இந்த நிலையில், மூத்த குடிமக்கள் முதலீடு செய்ய மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மற்றும் மூத்த குடிமக்கள் எஃப்டி திட்டம் இரண்டி எது சிறந்தது என்பது குறித்து பார்க்கலாம்.

1 / 5
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் என்பது மத்திய அரசு வழங்க கூடிய சிறப்பு திட்டமாகும். இது 60 வயது அல்லது அதற்கும் மேற்பட்டவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு திட்டமாகும். இந்த திட்டத்தில் தற்போது ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாக உள்ளது. 

2 / 5
ஒருவேளை முதலீடு செய்யும் நபர் முதலீடு காலத்தை நீட்டிக்க விரும்பினால், 5 ஆண்டுகள் உடன் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு முதலீடு செய்துக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் ஒருவர் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்துக்கொள்ளலாம். இதில் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கும் வழங்கப்படுகிறது. 

3 / 5
மூத்த குடிமக்கள் எஃப்டி திட்டம் வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு மற்ற எஃப்டி திட்டங்களை விட அதிக வட்டி வழங்கப்படுகிறது. உதாரணமாக வங்கிகள் இந்த திட்டத்திற்கு 7.1 சதவீதம் வரை வட்டி வழங்கும் நிலையில், சிறு நிதி நிறுவனங்கள் 8 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன. 

4 / 5
இந்த இரண்டு திட்டங்களை ஒப்பிட்டு பார்க்கையில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் சற்று சிறந்ததாக உள்ளது. இந்த திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கப்படுவதுடன், அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதால் மிகவும் பாதுகாப்பான திட்டமாகவும் உள்ளது. விருப்பம் இருக்கும் பட்சத்தில் முதலீடு செய்ய உள்ள பணத்தில் ஒரு பகுதியை எஃப்டி திட்டத்திலும் மீதமுள்ளதை மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திலும் முதலீடு செய்யலாம். 

5 / 5
Follow Us