Rabies From Scratch: கீரி, நாயின் ஒரு கீறல் கூட ரேபிஸை ஏற்படுத்துமா..? எச்சரிக்கும் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா!
Anti Rabies Injection for Animal Bite: தெரு நாய்கள் மட்டுமே ஆபத்தானவை என்று மக்கள் பெரும்பாலும் நினைக்கிறார்கள். இருப்பினும், செல்லப்பிராணி நாய்களுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி போடப்படாவிட்டால், அவையும் ரேபிஸையும் பரப்பக்கூடும். மேலும், தடுப்பூசி போடப்படாத தெரு நாய்களுடன் தொடர்பு கொள்ளும் செல்ல நாய்களுக்கும் இந்த வைரஸ் பரவலாம்.
சமீபத்தில் திருவாரூரில் 9ம் வகுப்பு மாணவனை கீரிப்பிள்ளை கடித்து, இதற்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளாததால் உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்தார். அதேபோல், சமீபத்தில் காஞ்சிபுரத்தில் பெற்றோர் திட்டுவார்கள் என பயந்து நாய் கடித்தத்தை மறைத்த பள்ளி மாணவர் (School Student) ரேபிஸ் நோய் தாக்கி உயிரிழந்தார். இப்படியாக, விலங்குகளிடம் இருந்து மனிதரை கொள்ளும் அளவிற்கு நோய் தாக்கி உயிரிழப்பு நிகழும் சம்பவம் நிகழ்ந்து வருகிறது. இந்தநிலையில், ரேபிஸ் நோய் (Rabies) கீரிப்பிள்ளை, நாய் மற்றும் பூனையால் ஏற்படுமா..? இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன..? உள்ளிட்ட விவரங்களை பிரபல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ரேபிஸ் நோய் என்றால் என்ன..? இது எப்படி பரவுகிறது..?
View this post on Instagram
ரேபிஸ் ஒரு ஆபத்தான வைரஸ் நோயாகும். இது பெரும்பாலும் நாய் கடித்தால் மட்டுமே மனிதர்களுக்கு பரவும் என்று நினைக்கிறார்கள். ஆனால், இது அப்படியல்ல. நாய், பூனை, கீரிப்பிள்ளை ஆகியவற்றின் ஒரு கீறல் கூட ஆபத்தானது. இது மிகவும் அரிதானது என்றாலும், ரேபிஸ் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.




ALSO READ: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் நாய் கடி.. ரேபிஸ் வராமல் தடுக்க முதலில் என்ன செய்ய வேண்டும்?
கீறல்கள் மூலம் ரேபிஸ் எவ்வாறு பரவுகிறது..?
நாய், கீரிப்பிள்ளை அல்லது பூனை அதன் பாதத்தை நக்கி, பின்னர் ஒரு நபரை கீறினாலோ, நக்கினாலோ வைரஸ் பரவக்கூடும். இவ்வாறு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றாலும், ஆனால் அது நடக்கும். ரேபிஸ் வைரஸ் பொதுவாக விலங்குகளின் உமிழ்நீரில் (எச்சில்) இருக்கும். பாதத்தில் வைரஸ் இருந்தால், அது ஒரு நபருக்கு அரிப்பு மூலம் பரவும். அப்படி இல்லையென்றால் கண்கள், மூக்கு அல்லது வாய் போன்ற பகுதிகள் மூலமாகவும் பரவும்.
வீட்டு நாய்கள் மூலமும் ஆபத்து ஏற்படுமா..?
தெரு நாய்கள் மட்டுமே ஆபத்தானவை என்று மக்கள் பெரும்பாலும் நினைக்கிறார்கள். இருப்பினும், செல்லப்பிராணி நாய்களுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி போடப்படாவிட்டால், அவையும் ரேபிஸையும் பரப்பக்கூடும். மேலும், தடுப்பூசி போடப்படாத தெரு நாய்களுடன் தொடர்பு கொள்ளும் செல்ல நாய்களுக்கும் இந்த வைரஸ் பரவலாம்.
நாய்கள், பூனைகள் குழந்தைகளை கடித்தாலோ, கீறினாலோ என்ன செய்ய வேண்டும்..?
- நாய்கள், பூனைகள் குழந்தைகளை கடித்தாலோ, கீறினாலோ பெற்றோராகிய நாம், முதலில் குழந்தைகளை அடிக்கவோ, திட்டவோ வேண்டாம். இது குழந்தைகளுக்கு பதட்டத்தை ஏற்படுத்தும்.
- குழந்தைகளுக்கு ஏற்பட்ட காயத்தை போட்டோ எடுத்து வைத்து, 15 நிமிடம் ஓடும் பைப் தண்ணீரில் காயம் பட்ட இடத்தை சோப்பு போட்டு கழுவ வேண்டும். இவ்வாறு செய்வது ரேபிஸ் வைரஸ் வெளியேற்ற உதவும் செய்யும்.
- இதனை தொடர்ந்து, மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஆண்டி – ரேபிஸ் தடுப்பூசியை குழந்தைகளுக்கு போட வேண்டும். இது தற்போது, அனைத்து அரசு சுகாதார மற்றும் மருத்துவமனைகளில் இலவசமாக கிடைக்கிறது.
ரேபிஸ் தாக்குதலுக்கான 3 வகைகள்:
முதல் வகை:
முதல் வகையில் ஏதேனும் ஒரு விலங்கு தோல்களில் நக்கி இருந்தாலோ, பற்கள் படாமல் கடித்திருந்தாலோ இதற்கு தடுப்பூசி எதுவும் தேவையில்லை.
2வது வகை:
விலங்குகளின் பற்கள் அல்லது கீறல்கள் மூலம் இரத்தம் வராமல் மனிதர்கள் தோல்களில் மீது லேசான காயம் ஏற்பட்டிருந்தால், இதற்கு கழுவுதல் மற்றும் ஆண்டி – ரேபிஸ் தடுப்பூசி போடப்பட வேண்டும். அதன்படி, மனிதர்களுக்கு 0,3,7,28 ஆகிய நாட்களை கணக்கில் கொண்டு 4 முறை ஆண்டி – ரேபிஸ் தடுப்பூசி போடப்பட வேண்டும்.
ALSO READ: கீரிப்பிள்ளை கடித்து பலியான 7 வயது சிறுவன்.. அதிர்ச்சி சம்பவம்!
3வது வகை:
விலங்குகளின் தாக்குதலுக்கு உட்பட்டு, மனிதர்களின் கை அல்லது கால்களில் இரத்தம் வரும் அளவிற்கு காயம் ஏற்பட்டிருந்தால், ஆண்டி – ரேபிஸ் தடுப்பூசியுடன் சேர்த்து ரேபிஸ் இம்யூனோகுளோபுலின் என்ற சிறப்பு தடுப்பூசியும் போடப்பட வேண்டும்.
மனிதர்களுக்கு விலங்குகளின் கீறல் சிறியதாக தோன்றினாலும், மருத்துவரை அணுகுவது எப்போதும் முக்கியம். ஏனெனில் ரேபிஸ் தாக்குதல் ஏற்பட்டால், இது மிகப்பெரிய ஆபத்திற்கு கொண்டு செல்லும்.