Health Tips: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் சிக்குன் குனியா.. இதன் அறிகுறிகள் என்ன..?
Tips To Prevent Chikungunya: சிக்குன் குனியா என்பது கொசு கடித்தால் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். இந்த நோய் பெண் ஏடிஸ் கொசு கடிப்பதால் பரவுகிறது. மக்கள் பெரும்பாலும் இந்த நோயை பருவகால காய்ச்சல் என்று நினைத்து புறக்கணித்து விடுகிறார்கள். இது தவறு. இந்த நோய்க்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது ஆபத்தானது.
பருவமாற்றத்தின்போது பல பருவகால நோய்கள் நம்மை ஆட்கொள்ள தொடங்கும். பருவ மாற்றத்தின்போது கொசுக்கள் (Mosquitoes) வேகாமாக இனப்பெருக்கம் செய்கின்றன. இது டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன் குனியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சிக்குன் குனியா (Chikungunya) வழக்குகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. சிக்குன் குனியா என்பது கொசுக்களால் பரவும் நோயாகும். இது ஏடிஸ் எஜிப்டி மற்றும் ஏடிஸ் அல்போகிக்டஸ் இனங்களின் கொசுக்களின் கடி மூலம் பரவுகிறது. டெங்கு பரவுவதற்கும் காரணமும் இதே கொசுக்கள்தான். இந்தநிலையில், சிக்குன் குனியா நோயின் அறிகுறிகள் என்ன..? இந்த நோய்க்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்வோம்.
ALSO READ: சர்க்கரை நோயாளிகள் குளிர்காலத்தில் இந்த தவறை செய்யக்கூடாது! ஏன் தெரியுமா?
சிக்குன் குனியா என்றால் என்ன..?
சிக்குன் குனியா என்பது கொசு கடித்தால் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். இந்த நோய் பெண் ஏடிஸ் கொசு கடிப்பதால் பரவுகிறது. மக்கள் பெரும்பாலும் இந்த நோயை பருவகால காய்ச்சல் என்று நினைத்து புறக்கணித்து விடுகிறார்கள். இது தவறு. இந்த நோய்க்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது ஆபத்தானது. இந்த நோய் கண் நோய், நரம்பு பிரச்சினைகள் மற்றும் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். யாருக்காவது அதிக காய்ச்சல் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.




சிக்குன் குனியாவின் அறிகுறிகள்:
- அதிக காய்ச்சல்
- உடல் முழுவதும் வலி
- கடுமையான தலைவலி
- மூட்டு வலி
- தோல் வெடிப்புகள்
- வாந்தி வருவது போல் உணர்வு
சிக்குன் குனியா அறிகுறி தென்பட்டால் என்ன செய்வது?
சிக்குன் குனியா அறிகுறி இருக்கும் நபர்களுக்கு நிறைய தண்ணீர் கொடுங்கள். இந்த நேரத்தில் நிறைய திரவங்களை குடிப்பது உடலின் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும். கடுமையான உடல் வலி, அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி மற்றும் மூட்டு வலி ஆகியவை ஏற்பட்டால், உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இந்த நோய்க்கு தடுப்பூசி அல்லது சிகிச்சை கிடையாது, கட்டுப்படுத்த மட்டுமே முடியும்.
ALSO READ: குளிர்காலத்தில் எலும்பு வலி, சோர்வுக்கு இதுவே காரணம்.. இதை உடனே சரிசெய்யுங்கள்..!
சிக்குன் குனியா நோயாளிக்கு அதிக காய்ச்சல், மூட்டு வலி, தோல் சொறி மற்றும் தசை வலி இருந்தால், முதல் 3-5 நாட்களுக்குள் RT-PCR பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். காய்ச்சல் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு மேல் இருந்தால், igM ஆண்டிபாடி சோதனை மேற்கொள்ளலாம்.