AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Health Tips: 30 வயதிற்கு மேற்பட்ட ஆண்களே உஷார்.. உங்கள் கருவுறுதல் பாதிக்க இதுவே காரணம்!

Male Fertility: பல ஆண்கள், தாங்கள் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும் வரை, தங்கள் கருவுறுதல் திறன் அப்படியே இருக்கும் என்று நம்புகிறார்கள். பெண்களைப் போல ஆண்களுக்கு கருவுறுதல் திறனில் திடீர் சரிவு ஏற்படுவதில்லை என்றாலும், ஆண்களின் கருவுறுதல் திறனில் வயது ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.

Health Tips: 30 வயதிற்கு மேற்பட்ட ஆண்களே உஷார்.. உங்கள் கருவுறுதல் பாதிக்க இதுவே காரணம்!
கருவுறுதல் பிரச்சனை
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 10 Jun 2026 20:16 PM IST

பல ஆண்கள் தங்களை முற்றிலும் ஆரோக்கியமானவர்கள் என்று கருதுகின்றனர். வழக்கமான உடற்பயிற்சி, பெரிய நோய்கள் ஏதுமின்றி, மற்றும் இயல்பான இரத்தப் பரிசோதனைகள் இருந்தபோதிலும், குறிப்பிட்ட வயதில் பெற்றோராகும் தங்கள் கனவை நிறைவேற்றுவதில் சிரமங்களை எதிர்கொள்வதாகப் புகார்கள் அதிகரித்து வருகின்றன. நிபுணர்களின் கூற்றுப்படி, இது நோய்களால் மட்டுமல்ல, வயது முதிர்வு மற்றும் புகைப்பிடித்தல் (Smoking) உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றங்களாலும் ஏற்படுகிறது. ஆரோக்கியமாக இருப்பது கருவுறுதல் பாதிக்கப்படாது என்று அர்த்தமல்ல. வயது ஆண்களின் இனப்பெருக்க அமைப்பைப் பாதிக்கிறது. ஆரோக்கியமாக இருந்தபோதிலும், பெண்கள் (Womens Health) மட்டுமல்ல, ஆண்கள் கருத்தரிக்கப் போராட வேண்டியுள்ளது. இங்கே, ஆண்கள் தவறாமல் பின்பற்ற வேண்டிய சில முக்கிய குறிப்புகளை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: பெண்களே! காலையில் இந்த யோகாசனங்களை மட்டும் செய்தால் போதும்..

ஆண்களின் கருவுறுதல் திறன் வயது ஆக ஆக ஏன் குறைகிறது?

பல ஆண்கள், தாங்கள் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும் வரை, தங்கள் கருவுறுதல் திறன் அப்படியே இருக்கும் என்று நம்புகிறார்கள். பெண்களைப் போல ஆண்களுக்கு கருவுறுதல் திறனில் திடீர் சரிவு ஏற்படுவதில்லை என்றாலும், ஆண்களின் கருவுறுதல் திறனில் வயது ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. இப்போதெல்லாம், தொழில் காரணமாகத் திருமணம் தாமதமாக செய்து கொண்டாலும், தங்களின் நல்ல ஆரோக்கியத்தால் கர்ப்பம் தரிப்பது எளிது என்று நினைக்கிறார்கள். இருப்பினும், ஹார்மோன் சமநிலையின்மை, மன அழுத்தம் மற்றும் மரபணுப் பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். இதனால், உடல்நலப் பிரச்சனைகள் இல்லாதபோதும், வயது முதிர்வின் காரணமாகவே ஆண்கள் எதிர்பாராத கருவுறுதல் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம்.

ஆண்கள் வயதாகும்போது கருத்தரிப்பதில் ஏன் சிரமம்?

விந்தணுவின் தரம் குறைதல்:

ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை, இயக்கம் மற்றும் அளவு ஆகியவை வயது ஆக ஆக படிப்படியாகக் குறையக்கூடும். விந்தணுக்களின் எண்ணிக்கை சாதாரணமாகத் தோன்றினாலும், வயது ஆக ஆக விந்தணுக்களில் உள்ள குரோமோசோம் பிரச்சனைகள் அதிகரித்து, நேரடியாக கருத்தரிப்பிற்கான வாய்ப்புகளைக் குறைக்கக்கூடும்.

ஹார்மோன் சமநிலையின்மை :

டெஸ்டோஸ்டிரோன் அளவு காலப்போக்கில் இயற்கையாகவே குறைகிறது. ஒரு ஆண் உடல் ரீதியாக ஆரோக்கியமாகத் தோன்றினாலும், குறைந்த டெஸ்டோஸ்டிரோன் அளவு விந்தணு உற்பத்தி, பாலியல் செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த இனப்பெருக்க செயல்திறனைப் பாதிக்கலாம்.

சில மருத்துவ நிலைகள்:

சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் வயதாக ஆக அதிகமாகக் காணப்படுகின்றன. இவற்றைச் சரியாகக் கையாளாவிட்டால், அவை விந்தணுக்களின் ஆரோக்கியத்தையும் கருவுறுதலையும் பாதிக்கக்கூடும்.

மன அழுத்தம் மற்றும் பிற வாழ்க்கை முறை:

அதீத மன அழுத்தம், தூக்கமின்மை, புகைபிடித்தல், மது அருந்துதல் அல்லது மாசுபாடு போன்ற காரணிகள் விந்தணுவின் தரத்தைப் பாதித்து, அதன் விளைவாக ஆண்களுக்குக் கவலையளிக்கக்கூடிய கருவுறுதல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். உறைந்த உணவுகள் மற்றும் துரித உணவுகளில் உள்ள சில பொருட்கள் இனப்பெருக்க ஆரோக்கியத்தைப் பாதிப்பது மட்டுமல்லாமல், அவை குரோமோசோம் செயல்பாட்டையும் பாதிக்கின்றன.

மரபணுப் பிரச்சனைகள் :

ஆண்களுக்கு வயதாகும்போது, ​​விந்தணுக்களில் மரபணு மாற்றங்கள் ஏற்படுவதற்கான அதிக ஆபத்து உள்ளது. இது கருவின் வளர்ச்சியைப் பாதித்து, கருச்சிதைவு அல்லது சில வளர்ச்சி சார்ந்த குறைபாடுகளின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.

ALSO READ: டீயுடன் தினமும் சிகரெட்டா..? இது இவ்வளவு ஆபத்தை தரும்.. நிறுத்துவது எப்படி?

ஆண்கள் ஆரோக்கியமான இருக்கசமச்சீர் உணவு, உடற்பயிற்சி, தியானம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைத்தல் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களையும், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் போன்றவற்றை கட்டுப்படுத்த வேண்டும். எனவே, ஆண்கள் வயதாகும்போது தங்கள் இனப்பெருக்க ஆரோக்கியத்தைப் புறக்கணிக்கக் கூடாது. மேலும் அவ்வப்போது ஒரு நிபுணரை அணுக வேண்டும்.

Follow Us