AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிங்கப்பூரில் இருந்து ஸ்கெட்ச்.. சென்னையில் தூக்கிய சுங்கத்துறை.. ரூ.5.80 கோடி தங்கம் பறிமுதல் செய்து அதிரடி!

Chennai Airport Gold Seized: சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடியை 80 லட்சம் மதிப்பிலான 4 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். அதனை கடத்தி வந்தவரிடமும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

சிங்கப்பூரில் இருந்து ஸ்கெட்ச்.. சென்னையில் தூக்கிய சுங்கத்துறை.. ரூ.5.80 கோடி தங்கம் பறிமுதல் செய்து அதிரடி!
சென்னை விமான நிலையம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 28 Jul 2026 08:03 AM IST

சென்னை மாவட்டத்தில் மீனம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் தினந்தோறும் ஏராளமான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களில் ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். அவ்வாறு பயணம் செய்யும் பயணிகள் தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்திச் செல்வதை தடுக்கும் வகையில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் ரூ.5.8 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்து சேர்ந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது, வெளிமாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் சுற்றுலா விசாவில் சிங்கப்பூர் சென்று விட்டு சென்னை திரும்பியது தெரிய வந்தது.

வடமாநில இளைஞர் சூட்கேசில் தங்கம் கடத்தல்

அவர் மீது சந்தேகம் அடைந்தார் இலாக அதிகாரிகள் அந்த இளைஞரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதனால், மேலும் சந்தேகம் அடைந்த இலாகா அதிகாரிகள் அவரிடமும், அவரது உடைமைகளையும் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த இளைஞரின் சூட்கேஸில் மேல் பகுதியில் ரகசிய அறை இருந்ததை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த ரகசிய அறையே பிரித்து பார்த்தபோது, அதில், தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

மேலும் படிக்க: பழனி நில முறைகேடு வழக்கு.. சஸ்பெண்ட் சார்-பதிவாளரிடம் சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணை!

ரூ.5.8 கோடி மதிப்பிலான 3.9 கிலோ தங்கம்

உடனே, தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை எடை போட்டு பார்த்தனர். இதில், 3 கிலோ 960 கிராம் தங்கம் இருப்பது தெரியவந்தது. இந்த தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூ.5 கோடியே 80 லட்சமாகும் என சுங்க இலாகா அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அந்த தங்கக் கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அத்துடன், அந்த இளைஞரையும் அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தங்க கடத்தல் பின்னணி குறித்த தீவிர விசாரணை

இதில், வெளிநாட்டில் இருந்து தங்கத்தை கடத்தி வருவதற்காக அந்த இளைஞரை சிங்கப்பூர் அனுப்பி வைத்தது யார். இதன் பின்னணியில் யார் யார் உள்ளனர் என்பன உள்ளிட்டவை குறித்து அந்த இளைஞரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் அவ்வப்போது இது போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவது நிகழ்ந்து வருகிறது. தற்போது, ரூ.5.80 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கு தொல்லை.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்.. முழு விவரம் என்ன!

Follow Us