Hair Care Tips: கூந்தலுக்கு நன்மை தரும் அரிசி தண்ணீர்.. வீட்டிலேயே ஹேர் மாஸ்க் செய்வது எப்படி?
Rice Hair Mask: தலைமுடிக்கு ஊட்டமளிக்க விரும்பினால், நீங்கள் நிச்சயமாக ஒரு ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்தலாம். முதலில், 2 ஸ்பூன் அரிசி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன், ஒரு ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து பேஸ்ட் செய்யவும்.
                                பலருக்கு முடி உதிர்தல் (Hair Loss) பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து சருகிறது. அதிலும் குறிப்பாக பெரும்பாலான பெண்களுக்கு தலைமுடி வறண்டு, மந்தமாக, உயிரற்றதாக மாறும் . இது முடி உதிர்தலை அதிகரிக்கவும் வழிவகுக்கிறது. பலர் இந்த பிரச்சனையை குறைக்க பார்லருக்கு பல்வேறு சிகிச்சைகளை மேற்கொள்கிறார்கள். ஆனால் இது பெரும்பாலானோருக்கு பலன் தராமல் போகலாம். உங்கள் தலைமுடியை பாதுகாக்க பார்லருக்கு செல்லாமல் உங்கள் சமையலறையில் உள்ள அரிசி ஊறவைத்த தண்ணீரை கொண்டு முடி பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா ? அரிசி இயற்கையான பளபளப்பு மற்றும் வலிமையை வழங்குவதில் நல்ல பலனைத் தருகிறது . அரிசி நீர் (Rice Water) மற்றும் அரிசியால் செய்யப்பட்ட ஹேர் மாஸ்க்குகள் முடியை ஊட்டமளிப்பது மட்டுமல்லாமல், சில்க் போன்றதாகவும் மென்மையாகவும் மாற்ற உதவுகின்றன.
ALSO READ: எது செய்தாலும் முடி உதிர்தல் இன்னும் நிற்கவில்லையா? இந்த வீட்டு வைத்தியங்கள் உதவும்..!
முடிக்கு அரிசியின் நன்மைகள்:
அரிசியில் வைட்டமின்கள் பி, ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இவை மயிர்க்கால்களுக்கு ஊட்டமளித்து, சேதமடைந்த முடியை சரிசெய்ய உதவுகின்றன. அரிசி நீரை தொடர்ந்து பயன்படுத்துவது முடியின் பளபளப்பை அதிகரித்து முடி உதிர்தலைக் குறைக்கிறது .




அரிசி நீரை எப்படி தயாரிப்பது..?
கூந்தலுக்கு அரிசி நீரின் நன்மைகளைப் பெற, அதை எவ்வாறு தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அரிசி நீரைத் தயாரிக்க, அரை கப் அரிசியைக் கழுவி 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். தண்ணீரை வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வைக்கவும் . ஷாம்பு போட்டு தலைமுடியை அலசிய பிறகு, உங்கள் தலைமுடியில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும் . பின்னர் உங்கள் தலைமுடியை சுத்தமான தண்ணீரில் கழுவவும் . வாரத்திற்கு இரண்டு முறை இதைப் பயன்படுத்தினால் உங்கள் தலைமுடிக்கு இயற்கையான பளபளப்பு கிடைக்கும்.
ALSO READ: சிறு வயதிலேயே நரை முடி தொல்லையா..? இந்த வைட்டமின் குறைபாடு காரணம்!
அரிசியுடன் கூடிய ஹேர் மாஸ்க்:
தலைமுடிக்கு ஊட்டமளிக்க விரும்பினால், நீங்கள் நிச்சயமாக ஒரு ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்தலாம். முதலில், 2 ஸ்பூன் அரிசி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன், ஒரு ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து பேஸ்ட் செய்யவும். இந்த பேஸ்ட்டை உங்கள் முடி வேர்க்கால்களில் நன்றாக தடவவும் . 30 நிமிடங்களுக்குப் பிறகு , உங்கள் தலைமுடியை லேசான ஷாம்பூவுடன் கழுவவும். இந்த மாஸ்க் உங்கள் தலைமுடிக்கு ஆழமான கண்டிஷனிங் வழங்கி, வறண்ட முடியைத் தடுக்கிறது. இதன்மூலம், முடி இயற்கையான பளபளப்பை தந்து சேதமடைந்த முடியை சரி செய்கிறது. மேலும், முடி அடர்த்தியாகவும் வலுவாகவும் மாறும். வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தினால், நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.