SK26: சிவகார்த்திகேயனின் 26வது படத்தை இயக்கும் தாய் கிழவி பட இயக்குநர்- டைட்டிலுடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக்!
Sivakarthikeyan SK26 Movie First Look: தமிழில் பிரபல கதாநாயகனாக விளங்கிவருபவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் இறுதியாக பராசக்தி படம் வெளியான நிலையில், இதையடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் புது படத்தில் இணைந்துள்ளார். SK26 என அழைக்ப்பட்டுவந்த இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குநர் பாண்டிராஜ் (Pandiraj) இயக்கத்தில் வெளியான மெரினா (Marina) என்ற படத்தின் மூலமாக சினிமாவில் கதாநாயகனாக நுழைந்தவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவர் தற்போது வெறும் நடிகராக மட்டுமில்லாமல், தயாரிப்பாளராகவும் படங்களை தயாரித்துவருகிறார். அந்த விதத்தில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் பராசக்தி (Parasakthi). சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமாக வெளியான இதை, இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்கியிருந்தார். இப்படம் கடந்த 2026 ஜனவரி 10ம் தேதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்டிருந்தது. வெளியான முதல் நாளிலே திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக வெங்கட் பிரபுவின் (Venkat Prabhu) இயக்கத்தில், SK26 படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக கூட்டப்பட்ட நிலையில், தற்போது சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugeshan) இயக்கத்தில் இப்படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார். இவர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவான தாய் கிழவி (Thaai kizhavi) என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர்களின் கூட்டணியில் உருவாகும் படத்தை கமல்ஹாசனின் (Kamal Haasan) தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் நாளை 2026 பிப்ரவரி 17ம் தேதியில் சிவகார்த்திகேயன் தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அதை முன்னிட்டு இப்படத்தின் முதல் பார்வை மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: டாக்சிக் – துரந்தர் 2 படத்துடன் போட்டியிடும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? – வைரலாகும் தகவல்!
சிவகார்த்திகேயன் – சிவகுமார் முருகேசன் கூட்டணி பட டைட்டில் என்ன:
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் சிவகார்த்திகேயன் நடிக்கும் புது படத்திற்கு, படக்குழு “சேயோன்” (Seyon) என டைட்டில் வைத்துள்ளது. இப்படமானது தெய்வீகம் கலந்த பேண்டஸி கதைக்களத்தில் தயாராகவுள்ளதாம். தற்போது வெளியாகியுள்ள இந்த போஸ்டரில், நடிகர் சிவகார்த்திகேயன் கையில் அரிவாளுடனும், அவரின் பின் மயில்தோகைகள் இடம்பெற்றுள்ளது. மேலும் இப்படமானது தமிழ் கடவுள் முருகன் குறித்த கதையில் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுவருகிறது, மேலும் இப்படத்தின் அறிமுக புரோமோ வீடியோ 2026 பிப்ரவரி 17ம் தேதியில், காலை 10 மணியளவில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
சிவகார்த்திகேயனின் சேயோன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பதிவு:
வீரம் உண்டு வெற்றி உண்டு #சேயோன் #Seyon Celebration Tomorrow at 10:00 AM#OneMoreTime#KamalHaasan #Sivakarthikeyan@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Dir_SivakumarM @Music_Santhosh @RKFI @turmericmediaTM @vivekvdop @Sanlokesh @naguraj_rk #keerthysampath… pic.twitter.com/hoxAkZnVme
— Raaj Kamal Films International (@RKFI) February 16, 2026
இதையும் படிங்க: அபிஷன் ஜீவிந்தின் வெற்றி.. 10 நாட்களில் ‘வித் லவ்’ பட வசூல் இத்தனை கோடியா? – வெளியான அறிவிப்பு!
சிவகார்த்திகேயனின் புது படத்தின் நடிகை :
சிவகார்த்திகேயனின் பராசத்தி படத்தில் அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடித்திருந்தார். தற்போது ஸ்ரீலீலாவும் தனுஷிற்கு ஜோடியாக புது படத்தில் நடித்துவருகிறார். அந்த விதத்தில் மீண்டும் சிவகார்த்திகேயன் தெலுங்கு நடிகையுடன் ஜோடியாக நடிக்கவுள்ளாராம். அந்த நடிகை வேறுயாருமில்லை காந்தா படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்தான். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.