Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Hair Fall: முடி உதிர்தலுக்கான காரணம் புரியவில்லையா? இந்த 5 உணவுகள் சேதப்படுத்தும்..!

Hair Fall Reasons: நமது தலைமுடி உதிர தொடங்கினால் பெரும்பாலும் ஷாம்புகள் அல்லது தண்ணீரை குறை கூறுகிறோம். ஆனால் உண்மையான காரணம் நாம் சாப்பிடும் சில வகை உணவாக (Food) இருக்கலாம். நீங்களும் முடி உதிர்தல் பிரச்சனையை அதிகமாக சந்தித்தால், அப்போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய சில விஷயங்கள்.

Hair Fall: முடி உதிர்தலுக்கான காரணம் புரியவில்லையா? இந்த 5 உணவுகள் சேதப்படுத்தும்..!
முடி உதிர்வு பிரச்சனைImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 19 Oct 2025 14:38 PM IST

நீங்கள் முடி உதிர்தலால் (Hair Fall) அவதிப்படுபவர்களில் ஒருவராக இருந்தால், இந்த செய்தியானது  உங்களுக்கானது. நீங்கள் அன்றாட விரும்பும் சில உணவுகள் உங்கள் முடி நுண்குழாய்களை பலவீனப்படுத்தும். இதுவும், உங்கள் தலைமுடி உதிர்தல் பிரச்சனைக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. நமது தலைமுடி உதிர தொடங்கினால் பெரும்பாலும் ஷாம்புகள் அல்லது தண்ணீரை குறை கூறுகிறோம். ஆனால் உண்மையான காரணம் நாம் சாப்பிடும் சில வகை உணவாக (Food) இருக்கலாம். நீங்களும் முடி உதிர்தல் பிரச்சனையை அதிகமாக சந்தித்தால், அப்போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய முடி உதிர்தலை ஏற்படுத்தும் 5 உணவுகள் பற்றி அறிந்து கொள்வோம்.

துரித மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்:

நாம் வேலை வேலை என அதிகம் ஓடும் நவீன வாழ்க்கையில் விரைவாக கிடைக்கும் உணவுகளை அவசர அவசரமாக சாப்பிடுகிறோம். அதில், இந்த சிக்கன் நூடுல்ஸ், சிக்கன் ரைஸ், ஷவர்மா போன்றவையும் அடங்கும். மேலும் பாக்கெட் உணவுகளான சிப்ஸ், ஸ்நாக்ஸ், பீட்சா மற்றும் பர்கர்கள் போன்றவைகளிலும் பெரும்பாலும் அதிக அளவு டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளன. இந்த கொழுப்புகள் உடலில் வீக்கத்தை ஏற்படுத்தி, முடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதைத் தடுத்து, பலவீனம் மற்றும் உடைப்புக்கு வழிவகுக்கும். இதனால், காரணமின்றி முடி உதிர்தல் பிரச்சனையை சந்திப்பீர்கள்.

ALSO READ: பளபளப்பான சருமம் வேண்டுமா..? வைட்டமின் ஈ வழங்கும் 5 காய்கறி உணவுகள்..!

சர்க்கரை உணவுகள்:

அதிகபடியான சர்க்கரை உணவுகள் உடல் பருமனை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் தலைமுடியையும் பலவீனப்படுத்தும். அதிகமாக சர்க்கரை சாப்பிடுவது உடலில் இன்சுலின் அதிகரிப்பை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக உடலில் ஆண்ட்ரோஜன் அளவு கூடும். இந்த ஹார்மோன் முடி வேர்களை பலவீனப்படுத்தி முடி உதிர்தலை அதிகரிக்கும்.

அதிக உப்பு உணவுகள்:

நீங்கள் காரமான மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை விரும்பினால், கவனமாக இருங்கள். அதிகப்படியான உப்பு உடலில் சோடியம் அளவை அதிகரிக்கிறது. இது முடியை வறண்டதாகவும் உயிரற்றதாகவும் ஆக்குகிறது. இது முடி உடைப்பை ஏற்படுத்தும்.

மது:

ஆல்கஹால் எடுத்து கொள்வது உடலை நீர்ச்சத்து இழப்பை ஏற்படுத்துகிறது. இந்த நீர்ச்சத்து இழப்பும் முடியின் மீது பாதிப்பை உண்டாக்குகிறது. இதனால் முடி வறண்டு, உடையக்கூடியதாகி, உதிர்வதை எளிதாக்குகிறது.

ALSO READ: ஐஸ் கட்டி கொண்டு 5 நிமிட மசாஜ்… முகம் இவ்வளவு பொலிவு பெறுமா..?

சில பால் பொருட்கள்:

சில பால் பொருட்கள், குறிப்பாக அதிக கொழுப்புள்ள பொருட்கள், உடலின் சரும உற்பத்தியை அதிகரிக்கும். சருமம் என்பது ஒரு எண்ணெய்ப் பொருளாகும், இது கூடுதலாக துளைகளை அடைத்து, முடி வளர்ச்சியைத் தடுத்து, முடி உதிர்தலை ஏற்படுத்தும். உங்களுக்கு முடி உதிர்தல் இருந்தால், குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களை உட்கொள்வது நல்லது.