Cooking Gas Saving Tips: சமையல் எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமா? சூப்பர் டிப்ஸ் இதோ!
Simple Kitchen Tips to save Gas: பிரஷர் குக்கரைப் பயன்படுத்துவதும் எரிவாயுவைச் சேமிக்க ஒரு நல்ல வழியாகும். குக்கரில் உள்ள நீராவியின் அழுத்தம் காரணமாக உணவு விரைவாக சமைக்கப்படுகிறது. பருப்பு, அரிசி, காய்கறிகள் போன்றவை குக்கரில் குறைந்த நேரத்தில் சமைக்க உதவும். இது சமையல் நேரத்தைக் குறைத்து எரிவாயு பயன்பாட்டையும் குறைக்கிறது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் போர் பதற்றம் இரு நாடுகள் மட்டுமே இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுஹ்தியுள்ளது. தமிழ்நாடு (Tamil Nadu) மட்டுமின்றி இந்தியாவின் பல இடங்களிலும் சமையல் எரிவாயு (Gas Cylinder) தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. சமையலுக்கு சரியான சமையல் பாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பது எரிவாயுவைச் சேமிக்க பெரிதும் உதவி செய்யும். எப்போதும் தட்டையான அடிப்பகுதியுடன் கூடிய சமையல் பாத்திரங்களைப் பயன்படுத்த முயற்சிக்கவும். அத்தகைய சமையல் பாத்திரங்கள் பர்னரில் சரியாகப் பொருந்தும். வெப்பம் நேரடியாக தாக்கி உணவை விரைவாக சமைக்க உதவும். சமையல் பாத்திரங்கள் வளைந்த அல்லது மிக மெல்லிய அடிப்பகுதியைக் கொண்டிருந்தால், அதிக கேஸை இழுக்கும்.
ALSO READ: சமையல் எரிவாயு சிலிண்டரை நீண்ட நாட்கள் பயன்படுத்துவது எப்படி?
அதிக வெப்பம்:
பலர் விரைவாக சமைக்க வேண்டும் என்பதற்காக அதிக வெப்பத்தை வைத்து சமைக்க தொடங்குவார்கள். இவ்வாறு செய்வது அதிக கேஸை இழுக்கும். பெரும்பாலான காய்கறிகள், பருப்பு, அரிசி போன்றவை நடுத்தர வெப்பத்தில் வைத்து சமைப்பதை போதுமானது. உணவு மெதுவாகவும் நடுத்தர வெப்பத்தில் சமைப்பதே நல்லது. இது உணவு கெட்டுப்போகும் அபாயத்தையும் குறைக்கிறது. இது வாயுவையும் சேமிக்கிறது.
பிரஷர் குக்கர் பயன்பாடு:
பிரஷர் குக்கரைப் பயன்படுத்துவதும் எரிவாயுவைச் சேமிக்க ஒரு நல்ல வழியாகும். குக்கரில் உள்ள நீராவியின் அழுத்தம் காரணமாக உணவு விரைவாக சமைக்கப்படுகிறது. பருப்பு, அரிசி, காய்கறிகள் போன்றவை குக்கரில் குறைந்த நேரத்தில் சமைக்க உதவும். இது சமையல் நேரத்தைக் குறைத்து எரிவாயு பயன்பாட்டையும் குறைக்கிறது.
சமைக்கும்போது பயன்படுத்தும் பாத்திரத்தை மூடி வைப்பதும் எரிவாயுவைச் சேமிக்க ஒரு எளிய வழியாகும். பாத்திரத்தை மூடி வைப்பது பாத்திரத்தின் உள்ளே வெப்பத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். இதனால் நீராவி வெளியேறுவதைத் தடுக்கும். இது உணவு வேகமாக சமைக்க உதவுகிறது. மூடி இல்லாமல் உணவை சமைத்தால் அதிக நேரம் ஆகலாம்.
பர்னர்களை சுத்தம் செய்தல்:
எரிவாயுவை சேமிக்க பர்னர்களை சுத்தம் செய்வதும் முக்கியம். பல நேரங்களில், பர்னர் துளைகளில் அழுக்கு அல்லது எண்ணெய் சேரும். இதனால் எரிவாயு தாறுமாறாக எரிய தொடங்கும். இது அதிக எரிவாயுவை பயன்படுத்துகிறது. வாரத்திற்கு ஒரு முறை பர்னர்களை சுத்தம் செய்வது சரியாக எரிவதை உறுதி செய்யும். இது குறைந்த எரிவாயுவை பயன்படுத்த உதவும்.
ALSO READ: சிலிண்டர் இல்லாவிட்டாலும் சமையல் செய்யலாம்.. உதவும் மின்சார சாதனங்கள்!
சமைப்பதற்கு முன் சில விஷயங்களை மேற்கொள்வது எரிவாயுவை சேமிக்க உதவும். உதாரணமாக, காய்கறிகளை வெட்டுவதற்கு முன் அல்லது பருப்பு மற்றும் அரிசியை கழுவி தயாரிப்பதற்கு முன். இது எரிவாயுவை பற்றவைத்த பிறகு உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும். இதுபோன்ற சிறிய பழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம், உங்கள் எரிவாயு சிலிண்டரை நீண்ட காலம் நீடிக்கும்படி செய்யலாம்.



