Hair Care Tips: எது செய்தாலும் முடி உதிர்தல் இன்னும் நிற்கவில்லையா? இந்த வீட்டு வைத்தியங்கள் உதவும்..!
Hairloss Homemade Tips: மன அழுத்தம், மாசுபாடு, மோசமான உணவு முறை மற்றும் ரசாயனப் பொருட்களின் அதிகப்படியான பயன்பாடு ஆகியவை முடி உதிர்தல் பிரச்சனைக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. விலையுயர்ந்த முடி பராமரிப்பு (Hair Care) பொருட்கள் பெரும்பாலும் பயனுள்ளதாக இருக்காது

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில், முடி உதிர்தல் (Hair Loss) வேகமாக அதிகரித்து வரும் ஒரு பிரச்சனையாகும். மன அழுத்தம், மாசுபாடு, மோசமான உணவு முறை மற்றும் ரசாயனப் பொருட்களின் அதிகப்படியான பயன்பாடு ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. விலையுயர்ந்த முடி பராமரிப்பு (Hair Care) பொருட்கள் பெரும்பாலும் பயனுள்ளதாக இருக்காது, இதுபோன்ற சந்தர்ப்பங்களில், வீட்டு வைத்தியம் எளிதான மற்றும் மிகவும் இயற்கையான வழியாக இருக்கலாம். இந்த வைத்தியங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள் இயற்கையானவை என்பதால், அவை எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.
தேங்காய் எண்ணெய் – எலுமிச்சை சாறு:
2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து, அதை லேசாக சூடாக்கி, உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். 30 நிமிடங்களுக்குப் பிறகு லேசான ஷாம்பூவைப் பயன்படுத்தி உங்கள் தலைமுடியை அலசவும். இவ்வாறு செய்வதன்மூலம், முடி உதிர்தல் மற்றும் பொடுகு இரண்டையும் கட்டுப்படுத்துகிறது. தேங்காய் எண்ணெய் முடி வேர்களுக்கு ஊட்டமளிக்கும் என்று அறியப்படுகிறது. இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் முடியை வலுப்படுத்துகின்றன.
வெந்தய விதை பேஸ்ட்:
ஒரு ஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில் அதை பேஸ்டாக அரைத்து உச்சந்தலையில் தடவவும். தொடர்ந்து, 30-40 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரில் தலைமுடியை அலசவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் முடி உதிர்தல் பிரச்சனை சரியாகும். வெந்தயத்தில் நிகோடினிக் அமிலம் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. மேலும், இது புதிய முடி வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும்.




நெல்லிக்காய் – தயிர் மாஸ்க்:
ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் பொடியுடன் 2 டீஸ்பூன் தயிரை கலக்கவும். இந்த மாஸ்க்கை வேர்கள் முதல் முடியின் நுனி வரை தடவி 30 நிமிடங்கள் வைத்திருங்கள். இது, உச்சந்தலையை குளிர்வித்து முடிக்கு அளவையும் வலிமையையும் சேர்க்கிறது. நெல்லிக்காயில் அதிகளவில் வைட்டமின் சி உள்ளது. இது முடி வேர்களை வலுப்படுத்தும். மேலும், இது முன்கூட்டியே நரைப்பதை தடுக்கிறது.
கற்றாழை ஜெல்:
கற்றாழை இலையிலிருந்து ஜெல்லைப் பிரித்தெடுத்து நேரடியாக உச்சந்தலையில் தடவவும். சரியாக 45 நிமிடங்களுக்குப் பிறகு லேசான ஷாம்பூவைப் பயன்படுத்தி உங்கள் தலைமுடியை அலசவும். இதை வாரத்திற்கு ஒரு முறை செய்வதன்மூலம் உங்கள் தலைமுடி மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறும். கற்றாழையில் உள்ள நொதிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். தொடர்ந்து, உச்சந்தலையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கின்றன.
ALSO READ: நாளுக்கு நாள் முடி உதிர்தல் அதிகரிக்கிறதா..? தடுக்க உதவும் 2 எளிய குறிப்புகள்!
வெங்காய சாறு:
சின்ன வெங்காயத்தை அரைத்து, அதன் சாற்றை நேரடியாக உச்சந்தலையில் தடவவும். 30 நிமிடங்களுக்குப் பிறகு தலையை கழுவவும். நீங்கள் முதல் முறை பயன்படுத்துகிறீர்கள் என்றால், ஆரம்பத்தில் லேசான வாசனைப் பிரச்சனை இருக்கும். இருப்பினும், முதல் வாரத்திலேயே பலன்கள் நன்றாக தெரியும்.