Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Monsoon Skincare: மழைக்காலத்தில் ஆரோக்கியமான சருமம் வேண்டுமா? இந்த வழிமுறைகள் செய்தால் போதும்!

Skin Care for Rainy Season: மழைக்காலம் பல சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதன்படி அரிப்பு, எரிச்சல் மற்றும் சிவப்பு புள்ளிகள் போன்ற பொதுவான பிரச்சனைகள் ஏற்படும். எனவே, மழைக்காலத்தில் உங்கள் சருமத்திற்கு சிறப்பு கவனம் செலுத்துவது அவசியம். அதன்படி, சருமத்தை பாதுகாக்க என்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

Monsoon Skincare: மழைக்காலத்தில் ஆரோக்கியமான சருமம் வேண்டுமா? இந்த வழிமுறைகள் செய்தால் போதும்!
அழகு பராமரிப்புImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 03 Dec 2025 20:35 PM IST

மழைக்காலம் (Monsoon) அதன்பிறகு வரும் குளிர்காலம் அதிக குளிர்ச்சியை தரும். இது குளிருடன் இந்த பருவத்தில் தோல் மற்றும் பிற நோய்களின் அபாயமும் கணிசமாக அதிகரிக்கும். இந்த பருவத்தில் சரும பராமரிப்பு (Skin Care) அவசியம். மழைக்காலம் பல சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதன்படி அரிப்பு, எரிச்சல் மற்றும் சிவப்பு புள்ளிகள் போன்ற பொதுவான பிரச்சனைகள் ஏற்படும். எனவே, மழைக்காலத்தில் உங்கள் சருமத்திற்கு சிறப்பு கவனம் செலுத்துவது அவசியம். அதன்படி, சருமத்தை பாதுகாக்க என்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: மழைக்காலத்தில் இந்த தவறுகள் வேண்டாம்.. முகத்தில் பளபளப்பு போகும்!

முகம் கழுவுதல்:

மழைக்காலத்தில் பெரும்பாலான நோய்கள் அழுக்குகள் மூலமே பரவுகின்றன. எனவே, உங்கள் கைகள், முகம் மற்றும் கால்களை வெளியே சென்று வந்தால் தவறாமல் கழுவுவது முக்கியம். ஒரு நாளைக்கு 2 முறை நல்ல பேஷ் வாஷ் மூலம் உங்கள் முகத்தையும் சுத்தம் செய்வதும் முக்கியம்.

டோனிங்:

மழைக்காலத்தில், வளிமண்டலம் பெரும்பாலும் ஈரப்பதமாக இருக்கும். இது சருமத்தில் உள்ள துளைகளை அடைத்து, பெரும்பாலும் முகப்பருவுக்கு வழிவகுக்கும். அதன்படி, நீங்கள் ஒரு நல்ல பாக்டீரியா எதிர்ப்பு ரோனரை பயன்படுத்தலாம். இது உங்களுக்கு விருப்பம் இல்லையெனில், ரோஸ் வாட்டரை பயன்படுத்துவதும் நன்மை பயக்கும்.

ஈரப்பதம்:

மழைக்காலத்தில் மாய்ஸ்சரைசர் தடவுவது சருமத்தில் பிசுபிசுப்பை கொடுக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால், இது தவறு. மழைக்காலத்தில் கூட சருமத்திற்கு ஊட்டச்சத்து மிகவும் முக்கியம். மழைக்காலத்தில் மீண்டும் மீண்டும் தண்ணீரில் முகத்தை கழுவி பிசுபிசுப்பை நீக்குகிறார்கள். இதனால், அரிப்பு மற்றும் தடிப்புகளை ஏற்படுத்தலாம். இதை தவிர்க்க மாய்ஸ்சரைசரை பயன்படுத்தலாம். அதேநேரத்தில், ஆயில் இல்லாத மாய்ஸ்சரைசரை பயன்படுத்தினால் இன்னும் பாதுகாப்பானது.

ஸ்கின் அலர்ஜி:

மழைக்காலத்தில் வெளியே சொல்லும்போதெல்லாம், நாம் அடிக்கடி நனைந்து விடுகிறோம். இது எப்போதும் தொற்று ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்தும். எப்போதும், உங்கள் சருமத்தை நீண்ட நேரம் ஈரமாக விடாதீர்கள். இது நாளடைவில் பூஞ்சை தொற்றை உண்டாக்கலாம்.

ALSO READ: மழைக்காலத்தில் பாத வெடிப்பா..? எளிதாக சரிசெய்யும் வீட்டு பொருட்கள்..!

வெயிலுக்கு செல்லாதீர்கள்:

சாதாரண நாட்களை காட்டிலும், மழைக்கு பிறகு வரும் வெயில் இன்னும் கடுமையானதாக தெரியும். அதன்படி, மழைக்காலத்தில் வெயில் அடிக்கும்போது நீங்கள் வெளியே செல்ல விரும்பினால் சன்ஸ்கிரீன் இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம். சன்ஸ்கிரீன் உங்கள் சருமத்தை புற ஊதா கதிர்களிடமிருந்து பாதுகாக்கும்.